''டாப்ஸியின்  மேக்கப் வெரி பேட்...'' வறுத்தெடுக்கும் நெட்டிசன்ஸ்! ஏன்? | Netizens trolled Actor Taapsee's makeup... Why?

வெளியிடப்பட்ட நேரம்: 17:10 (16/04/2019)

கடைசி தொடர்பு:17:10 (16/04/2019)

''டாப்ஸியின்  மேக்கப் வெரி பேட்...'' வறுத்தெடுக்கும் நெட்டிசன்ஸ்! ஏன்?

பாலிவுட்டில், விளையாட்டு வீராங்கனைகளின் வாழ்க்கை வரலாற்றைப் படமாக எடுப்பது வழக்கமான விஷயம்தான். பாக்ஸிங் வீராங்கனை மேரிகோம் வாழ்க்கை வரலாற்றில் பிரியங்கா சோப்ரா நடித்தார். அடுத்து, டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்ஸாவின் வாழ்க்கை வரலாற்றைப் படமெடுக்கப்போவதாக, பாலிவுட் படத் தயாரிப்பாளர் ரோனி ஸ்க்ருவாலா, சென்ற வருடம் அறிவித்தார்.

தற்போது, உத்தரப்பிரதேச மக்களால் செல்லமாக 'ஷூட்டர் தாதி' என்றும் 'ரிவால்வர் தாதி' என்றும் அழைக்கப்படுகிற சந்திரோ டோமரின் வாழ்க்கை வரலாற்றை 'சாந்த் கி ஆன்ங்க்'  ( SaandKiAankh) என்ற பெயரில் படமாக எடுத்துக்கொண்டிருக்கிறார்கள். 86 வயதாகும் இந்தப் பாட்டிதான், உலகின் வயதான பெண் ஷார்ப் ஷூட்டர். தேசிய அளவில் 25 மெடல்கள் வாங்கியவர்.  இந்த ரிவால்வர் தாதியைப் பற்றி குறிப்பிட்டுச் சொல்லவேண்டிய ஒரு விஷயம், இவர் தன்னுடைய 65 வயதில்தான் துப்பாக்கி சுட பயிற்சி எடுக்க ஆரம்பித்தார். 'சாந்த்கி ஆன்ங்க்' படத்தில் ரிவால்வர் தாதியாக நடிக்கப்போகிறவர், வெள்ளாவிப் பொண்ணு டாப்ஸி பன்னு. படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை, டாப்ஸி தன் இன்ட்ஸ்டாவில் பகிர்ந்தவுடன், பாராட்டுகள், விமர்சனங்கள் என்று குவிந்துகொண்டிருக்கின்றன.

 'சாந்த்கிஆன்ங்க்'  ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் - மேக்கப்

'ஆசம்', 'காங்கிராஜுலேஷன், 'உங்களைப் பார்த்து பெருமைப்படுகிறேன்' என்று  ஒரு சாரார் டாப்ஸியைப் புகழ்ந்து தள்ள, மற்றொரு சாரார், 'வயதான பெண்மணியின் வாழ்க்கை வரலாற்றில் ஏன் இளம் வயது ஹீரோயின் நடிக்க வேண்டும். பாலிவுட்டில் சீனியர் நடிகைகள் இல்லையா' என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்கள். இன்னும் சிலர், 'டாப்ஸியின் வயதான மேக்கப் வெரி பேட்' என்றும், 'ரிவால்வர் தாதியின் கதை வலுவானது. அதற்கு, ஸ்டார் வேல்யூ இருக்கிற நடிகை தேவையே இல்லை' என்றும் கமென்ட் செய்திருக்கிறார்கள். 

வாழ்க்கை வரலாறுகள் படமான பிறகுதான் விமர்சனங்கள் வரும். 'சாந்த் கி ஆன்ங்க்' -கில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரின்போதே விமர்சனங்கள் வரத் தொடங்கிவிட்டன.