யூடியூபிலிருந்து நீக்கப்பட்ட மோடி பயோபிக் டிரெய்லர்! | modi biopic movie trailer removed from you tube

வெளியிடப்பட்ட நேரம்: 18:43 (16/04/2019)

கடைசி தொடர்பு:19:05 (16/04/2019)

யூடியூபிலிருந்து நீக்கப்பட்ட மோடி பயோபிக் டிரெய்லர்!

நாடாளுமன்றத் தேர்தல் இந்திய முழுவதும் மிகுந்த பரபரப்புக்கு இடையே நடக்க இருக்கிறது. இந்தச் சூழலில் பிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாற்றை பி.எம்.நரேந்திர மோடி என்ற பெயரில் இந்தியில் படமாக எடுக்கப்பட்டது. மேரி கோம் வாழ்க்கையைப் படமாக எடுத்த இயக்குநர் ஓமங் குமார் (Omung Kumar) இந்தப் படத்தை எடுத்திருந்தார். இதனாலேயே பலரும் இந்தப் படத்தை எதிர்பார்த்து காத்திருந்தனர். விவேக் ஓப்ராய் நடிப்பில் இந்தப் படத்தின் டிரெய்லர் சில வாரங்களுக்கு முன்பு இணையத்தில் வெளியானது. 

மோடி

முதற்கட்ட வாக்குப்பதிவு நாளான கடந்த 11-ம் தேதி படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. கடைசி நேரத்தில் மறு உத்தரவு வெளிவரும் வரை படத்தை ரிலீஸ் செய்யக் கூடாது எனத் தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்தது. இதையடுத்து, படத்தின் ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டிருக்கிறது. 

மோடி பயோபிக் டிரெய்லர்

இந்தநிலையில், அந்தப் படத்தின் டிரெய்லரும் யூடியூபில் இருந்து நீக்கப்பட்டிருக்கிறது. `Modi biopic trailer' என யூடியூபில் தேடுகையில், அவரது வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட வெப் சீரிஸ் குறித்த வீடியோக்களே கிடைக்கிறது. படத்தின் ரிலீஸுக்குத் தேர்தல் ஆணையம் தடை விதித்த பின்னர், டிரெய்லர் யூடியூபிலிருந்து நீக்கப்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க