'தர்பார்' படத்தில் இணையும் விஜய் படத்தின் பிரபல இயக்குநர்! | John mahendran joins DHARBAR movie!

வெளியிடப்பட்ட நேரம்: 20:00 (16/04/2019)

கடைசி தொடர்பு:20:00 (16/04/2019)

'தர்பார்' படத்தில் இணையும் விஜய் படத்தின் பிரபல இயக்குநர்!

ஜான் மகேந்திரன்

சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான 'பேட்ட' படத்திற்குப் பிறகு, ரஜினி கமிட் ஆகியிருக்கும் படம் 'தர்பார்'. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கவிருக்கும் இந்தப் படத்தின் போஸ்டர் வெளியானதும், அவரின் வெறித்தனமான ரசிகர்கள் பலரும் ஷேர் செய்து அதகளப்படுத்திவிட்டார்கள். 'தர்பார்' படத்தில் ரஜினிகாந்த் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். இதற்கான படப்பிடிப்பு, தற்போது மும்பையில் நடந்துவருகிறது.

ஜான் மகேந்திரன்

ரஜினி, முருகதாஸ் கூட்டணி அமைத்திருக்கும் இப்படத்திற்கு, 'நாற்காலி' என்ற டைட்டில்தான்  வைக்கவிருக்கிறார்கள் என ஆரம்பத்தில் பரவலாகப் பேசப்பட்டது. அரசியல் சார்ந்த கதையில் ரஜினி நடிக்கப்போகிறார் என்கிற செய்திகளால் ரசிகர்கள் பலரும் இந்தப் பெயரை உறுதிப்படுத்திப் பேசிவந்தனர். அதற்குப் பிறகு, அதிகாரபூர்வமாக ரஜினி நடிக்கும் படத்தின் தலைப்பு, 'நாற்காலி' இல்லை என்ற செய்தி வெளியானது. இதைத் தொடர்ந்து படத்தின் டைட்டில் 'தர்பார்' என்றும், ரஜினியின் லுக்கும் போஸ்டரில் வெளியானது என்பது எல்லோரும் அறிந்ததே.

இந்நிலையில், 'தர்பார்' படத்தில் நயன்தாரா ஹீரோயினாக நடிக்கிறார். பாலிவுட்டைச் சேர்ந்த நடிகர் ஒருவர்தான் வில்லனாக நடிக்கவிருக்கிறார் எனத் தகவல்கள் வெளியாகியிருக்கிறது. அனிருத் இந்தப் படத்திற்கு இசை அமைக்கிறார். 

சமீபத்தில் மறைந்த லெஜென்ட்ரி டைரக்டர் மகேந்திரனின் மகன் ஜான் மகேந்திரன், 'தர்பார்' படத்தில் இணைகிறார். தளபதி விஜய் மற்றும் ஜெனீலியா நடித்து வெளியான 'சச்சின்' படத்தின் இயக்குநர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

'முள்ளும் மலரும்' படத்தைப் பற்றியும், என் அப்பாவைப் பற்றியும் கிட்டத்தட்ட  40 நிமிடங்களுக்கு மேல்  என்னிடம் பேசினார் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்' என ஒரு யூடியூப் சேனலின் பேட்டியில் கூறியிருக்கிறார் ஜான் மகேந்திரன். 

'பேட்ட' படத்தில், மறைந்த இயக்குநர் மகேந்திரன், ரஜினியுடன் நடித்திருந்தார் என்பதும் அறிந்ததே. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க