'நான்கு பசங்களைப் படிக்கவைக்கிறேன்''- விஜய் டி.வி அமுதவாணன் ஷேரிங்ஸ் | Amudhavanan shares about his services

வெளியிடப்பட்ட நேரம்: 21:20 (16/04/2019)

கடைசி தொடர்பு:21:20 (16/04/2019)

'நான்கு பசங்களைப் படிக்கவைக்கிறேன்''- விஜய் டி.வி அமுதவாணன் ஷேரிங்ஸ்

அமுதவாணன்

விஜய் டி.வி-யில் ஒளிபரப்பாகத் தயாராக இருக்கும் 'லொள்ளு சபா'வின் லீட் ரோலில் நடித்துவருகிறார் அமுதவாணன். ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுவரும் அந்த நிகழ்ச்சியில், பிஸியாக நடித்துக்கொண்டிருக்கும் அமுதவாணனிடம், பழைய ஷோக்கள் எல்லாம் ஞாபகத்தில் இருக்கிறதா என்றவாறே பேச ஆரம்பித்தோம்.  

''நான் எப்பவுமே 'ஜோடி', 'கலக்கப்போவது யாரு' எனப் பழைய ஷோவை போட்டுப் பார்ப்பேன். அது, உள்ளுக்குள் ஒரு உந்துதலைத் தரும்.  ஜோடியில் ஆடும்போது, எத்தனையோ டான்ஸ் ஸ்டெப்ஸை கற்றிருப்பேன் அல்லவா... அந்த ஸ்டெப்ஸெல்லாம் ஞாபகம் வரும். முயற்சிகளில் வந்த ஸ்ட்ப்ஸை மறுபடியும் போட்டுப் பார்ப்பேன். அந்த நேரத்தில் கிடைத்த கைதட்டல்கள் உற்சாகத்தைத் தரும். ஜட்ஜஸ் கொடுத்த கமென்ட்ஸ் ஊக்கம் கொடுக்கும். இப்போதும், பல ஊர்களில் பல ஷோக்களைப் பண்ணிட்டிருக்கேன். 
 

அமுதவாணன்

ஒவ்வொரு கைதட்டலையும் என் தோல்விகளுக்கான மருந்தாகவே நினைக்கிறேன். சில நேரங்களில், ஜோடி சீசனில் வெறிகொண்டு ஸ்பீடாக ஆடியிருப்பேன். இப்படி ஒரு வேகம் எப்படி நமக்குள் இருந்தது என இப்போதும் நினைத்துப்பார்ப்பேன். எல்லாருடைய பாடி லாங்குவேஜ் டான்ஸ் பண்ணுவேன்.' என்பவர், 

''வீட்டிலிருக்கும்போது, எதாவது ஒரு வேலையைச் செய்துட்டு இருப்பேன். வீட்டை அலங்கரிப்பது பிடிக்கும். வீட்டை மாற்றி அமைப்பது பிடிக்கும். மர வேலைப்பாடுகள் கொண்ட பொருள்கள் எனக்குப் பிடித்திருந்தால் உடனே வாங்கிவிடுவேன். அதே மாதிரி, டிசைனும் பண்ணுவேன். அதைத் தாண்டி, நான்கு பசங்களைப் படிக்க வச்சிட்டு இருக்கேன். அரசுப் பள்ளிதான்... எட்டாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு, பதினொன்று, பன்னிரண்டாம் வகுப்பு எனப் படிக்கிறார்கள். காரைக்காலில் ஒரு பையனை 'கலக்கப்போவது யாரு' பாலாவும், நானும் சேர்ந்து பார்த்துக்கிறோம்'' என்கிறார் அமுதவாணன்.  

நீங்க எப்படி பீல் பண்றீங்க