விவசாயி கெட்-அப்... ஷங்கர், மணிரத்னம் ரேஞ்ச் செட்-அப் - ஜெயம் ரவி 25 சுவாரஸ்யம் #jr25 | jayam ravi announces his 25th film

வெளியிடப்பட்ட நேரம்: 09:00 (19/04/2019)

கடைசி தொடர்பு:10:30 (19/04/2019)

விவசாயி கெட்-அப்... ஷங்கர், மணிரத்னம் ரேஞ்ச் செட்-அப் - ஜெயம் ரவி 25 சுவாரஸ்யம் #jr25

ஜெயம் ரவி

2003-ம் ஆண்டு `ஜெயம்' படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ஜெயம் ரவி. ஆரம்பத்தில் அண்ணன் மோகன் ராஜா படங்களில் நடித்து வந்த இவர், பின் இதர இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர்கள் படத்திலும் நடிக்க ஆரம்பித்தார். பல படங்கள் மூலம் ரொமான்டிக் ஹீரோவாக இடம்பிடித்த இவர் `ஆதி பகவான்', `தனி ஒருவன்' படங்கள் மூலம் ஆக்‌ஷன் ஹீரோ இடத்தையும் பிடித்தார். தற்போது தனது 24 -வது படமாக குறும்பட இயக்குநர் பிரதீப் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்துக்கு `கோமாளி' எனத் தலைப்பு இருக்கலாம் என்று பேசி வரும் நிலையில், தனது 25-வது படத்தின் அறிவிப்பை வெளியிட்டுள்ளார் ரவி. ரோமியோ ஜூலியட், போகன் படங்களை இயக்கிய லக்‌ஷ்மன் இயக்கத்தில் முழுக்க முழுக்க விவசாயி பிரச்னைகள் பேசும் ஒரு கதையைத் தேர்ந்தெடுத்து நடிக்கவுள்ளார்.

jayam ravi 25

இப்படத்தில் இயக்குநர் சங்கர் படங்கள் போன்ற சமுதாயக் கருத்தையும், மணிரத்னத்தின் `திருடா திருடா' போன்ற திரைக்கதையும் இருக்கும் என்கிறார்கள். ரவியின் கெட்-அப் முதற்கொண்டு படத்தில் பல சர்ப்ரைஸ்களும் இருக்கும் என்று படக்குழு தெரிவிக்கிறது. `போகன்', `ரோமியோ ஜூலியட்' படங்கள்போல இப்படத்திலும் ரவி, இமான், லக்‌ஷ்மன் கூட்டணி இணையவுள்ளது. இப்படத்தில் நாயகி மற்றும் ஏனைய தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த விஷயங்கள் இன்னும் முடிவு செய்யப்படவில்லை.