`விஜய் அண்ணாவ எனக்குப் பிடிக்கும்; அப்படி பேசினதுக்கு வருத்தப்படுறேன்!’ - நடிகர் கருணாகரன் ட்வீட் | actor karunakaran apologise for the tweet

வெளியிடப்பட்ட நேரம்: 11:50 (19/04/2019)

கடைசி தொடர்பு:11:50 (19/04/2019)

`விஜய் அண்ணாவ எனக்குப் பிடிக்கும்; அப்படி பேசினதுக்கு வருத்தப்படுறேன்!’ - நடிகர் கருணாகரன் ட்வீட்

கருணாகரன்

குறும்படங்கள் மூலம் சினிமாவில் நடிக்க ஆரம்பித்தவர்களில் ஒருவர் நடிகர் கருணாகரன். `கலகலப்பு', `பீட்சா', `சூதுகவ்வும்', `செம போத ஆகாதே' உள்ளிட்ட படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்தவர் கருணாகரன். சர்கார் ஆடியோ லான்ச் சமயத்தில் விஜய் ரசிகர்களுக்கும் கருணாகரனுக்கும் ட்விட்டரில் காரசாரமான வாக்குவாதம் நடைபெற்றது. இதில் ரசிகர்கள் சிலர் ஒருமையில் பேச அரசியல்வாதிகளுக்கு மட்டும்தான் குட்டிக்கதையா எனவும் வினவியிருந்தார். இந்த விவகாரம் கருணாகரன் தமிழனா என்று கேட்டு கொலை மிரட்டல் அளவுக்குச் சென்றது. 

கருணாகரன்

கருணாகரன் காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுக்க, காவல்துறை நடவடிக்கை எடுத்து வந்ததையடுத்து சர்ச்சைக்குரிய ட்வீட்டுகளை விஜய் ரசிகர்கள் டெலிட் செய்தனர். அந்தச் சம்பவத்தில் தான் யாரையும் தவறாகப் பேசியிருந்தால் மன்னிப்புக் கோருவதாக கருணாகரன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அந்த ட்வீட்டில் ``நான் எப்போதும் யாரையும்  வெறுப்பதில்லை. எனக்கு ரொம்பப் பிடித்த  விஜய் அண்ணாவை வெறுக்கிறேன் என்று சொல்லியிருக்கக்கூடாது. அதற்கு வருத்தப்படுகிறேன். அவர் எனக்குப் பிடித்தமான நடிகர் அது அவருக்கும் தெரியும். சோஷியல் மீடியாவில் யாரையாவது புண்படுத்தும்படி பேசியிருந்தால் உண்மையிலேயே மன்னிப்பு வேண்டுகிறேன் " எனப் பதிவிட்டுள்ளார்.