பாலாவின் அடுத்த மூவ் - 'நோ' சொன்ன விஷால் 'யெஸ்' சொன்ன ஆர்யா! | bala trying his actor friends for a new film after varma

வெளியிடப்பட்ட நேரம்: 16:15 (19/04/2019)

கடைசி தொடர்பு:17:24 (19/04/2019)

பாலாவின் அடுத்த மூவ் - 'நோ' சொன்ன விஷால் 'யெஸ்' சொன்ன ஆர்யா!

பாலா

பாலா இயக்கத்தில் விக்ரம் மகன் துருவ் நடித்த `வர்மா' திரைப்படம் ரிலீசாகும் முன்பே அந்தப் படத்தை ட்ராப் செய்துவிட்டனர். வழக்கமாகப் பாலா வெளிமொழி படங்களை ரிமேக் செய்யமாட்டார். விக்ரம் கேட்டுக்கொண்டதால் இயக்கிய `வர்மா' நின்று போனதில் பாலாவுக்கு டன் டன்னாய் வருத்தம்.

விஷால்

பாலாவும், அடுத்து ஒரு ஹிட் படத்தைக் கொடுக்கும் முயற்சியில் இறங்கினார். விஷால் கால்ஷீட் தர ஒப்புக்கொண்டதால் தயாரிப்பாளர் தேடும் பணி தீவிரமாக நடந்தது. மதுரை அன்புவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. முதலில் ஆசையோடு ஆமோதித்த அன்பு, பின்பு என்ன நினைத்தாரோ தெரியவில்லை `இப்போதைக்கு புதுப்படம் தயாரிக்கும் எண்ணம் இல்லை' என்று கைவிரித்துவிட்டார். அடுத்தகட்ட பேச்சுக்காக விஷாலிடம் அணுகினார், பாலா.

ஆர்யா

`அண்னே, அஞ்சு படத்துக்கு அட்வான்ஸ் பணம் வாங்கிட்டேன். அதனால உங்க படத்துல நடிக்கமுடியலை' என்று விஷால் `நோ' சொல்லிவிட்டார். அன்புவும் விஷாலும் விலகிக்கொண்ட பிறகு இப்போது ஆர்யாவை ஹீரோவாக வைத்து புதுப்படம் எடுக்கும் முயற்சியில் இறங்கி இருக்கிறார் பாலா.

 

 

 

இப்போது ஹீரோவும் ரெடி, டைரக்டரும் ரெடி. தயாரிப்பாளரைத்தான்  தேடிக்கொண்டு இருக்கிறார்கள். சரியான தயாரிப்பாளர் கிடைத்ததும் ஷூட்டிங் தொடங்கிவிடும் என்கின்றனர் இயக்குநர் தரப்பில்!

நீங்க எப்படி பீல் பண்றீங்க