`அரசியலுக்கு வர எல்லாத் தகுதியும் உனக்கு இருக்குது!' - விஷாலின் 'அயோக்யா' டிரெய்லர் | Ayogya movie trailer released

வெளியிடப்பட்ட நேரம்: 17:02 (19/04/2019)

கடைசி தொடர்பு:18:17 (19/04/2019)

`அரசியலுக்கு வர எல்லாத் தகுதியும் உனக்கு இருக்குது!' - விஷாலின் 'அயோக்யா' டிரெய்லர்

ஏ.ஆர்.முருகதாஸின் துணை இயக்குநர் வெங்கட் மோகன், 'அயோக்யா' படத்தின்மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமாகியிருக்கிறார். இந்தப் படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. 

அயோக்யா

அறிமுக இயக்குநர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில், விஷால் ராணுவ அதிகாரியாக நடித்த 'இரும்புத்திரை' படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இதைத் தொடர்ந்து, விஷால் போலீஸாக நடிக்கும் 'அயோக்யா' படத்தில், இவருக்கு ஜோடியாக ராஷி கண்ணா நடித்திருக்கிறார். இவர்களைத் தவிர கே.எஸ்.ரவிக்குமார், பார்த்திபன், எம்.எஸ்.பாஸ்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். சன்னி லியோன், இப்படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் வருகிறார். சாம்.சி.எஸ் இசையமைத்திருக்கும் இப்படத்தை லைட் ஹவுஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. மேலும், தெலுங்கில் ஜூனியர் என்.டி.ஆர், காஜல் அகர்வால் நடித்த 'டெம்பர்' படத்தின் ரீ-மேக்தான் இப்படம். படம், வரும் மே 10-ம் தேதி வெளியாக இருக்கிறது.