பா.இரஞ்சித் தயாரிக்கும் மூன்றாவது படம் - விரைவில் படப்பிடிப்பு! | pa.ranjith produce third movie

வெளியிடப்பட்ட நேரம்: 19:53 (19/04/2019)

கடைசி தொடர்பு:19:53 (19/04/2019)

பா.இரஞ்சித் தயாரிக்கும் மூன்றாவது படம் - விரைவில் படப்பிடிப்பு!

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர் பா.இரஞ்சித், `பரியேறும் பெருமாள்' படத்தின் மூலமாகத் தயாரிப்பாளரானார். இயக்குநர் ராமிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த மாரி செல்வராஜ் இந்தப் படத்தை இயக்கினார். கதிர் மற்றும் `கயல்' ஆனந்தி நடிப்பில் வெளிவந்த இந்தப் படம், பல்வேறு விருதுகளைப் பெற்றது. ரஞ்சித் தற்போது தொடர்ந்து படங்களையும் தயாரித்துவருகிறார். 

பா.ரஞ்சித்

இவரது நீலம் புரொடக்‌ஷன்ஸ், `இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு' என்ற படத்தைத் தயாரித்து முடித்திருக்கிறது. ரஞ்சித்திடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த அதியன் ஆதிரை படத்தை இயக்க, `அட்டகத்தி' தினேஷ் நாயகனாக நடித்திருக்கிறார். `தி கேஸ்ட்லெஸ் கலெக்டிவ்' மற்றும் `மகிழ்ச்சி' ஆகிய ஆல்பங்களின் இசையமைப்பாளர் தென்மா, இப்படத்தின்மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகி இருக்கிறார்.

இந்நிலையில், நீலம் புரொடக்‌ஷன்ஸ் தனது அடுத்த படைப்பை பத்ரி கஸ்தூரியின் ஷர்தா என்டர்டெயின்மென்ட் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்க இருக்கிறது. `கபாலி', `காலா' படங்களில் ரஞ்சித்திடம் இணை இயக்குநராகப் பணிபுரிந்த சுரேஷ் மாரி எடுக்கயிருக்கும் இந்தப் படத்தில், கலையரசன் மற்றும் அரவிந்த் ஆகாஷ் நடிக்க இருக்கின்றனர். விரைவில் படப்பிடிப்பு ஆரம்பமாக இருக்கிறது. 

கலையரசன்

நீங்க எப்படி பீல் பண்றீங்க