`இது தமிழ்ச் சமூகத்துக்கே பெருத்த அவமானம்!' - 'பொன் பரப்பி' சம்பவம் குறித்து கமல்  | MNM leader kamal on ariyalur pon parappi issue

வெளியிடப்பட்ட நேரம்: 14:30 (20/04/2019)

கடைசி தொடர்பு:14:30 (20/04/2019)

`இது தமிழ்ச் சமூகத்துக்கே பெருத்த அவமானம்!' - 'பொன் பரப்பி' சம்பவம் குறித்து கமல் 

அரியலூர், பொன் பரப்பி கிராம சம்பவம் குறித்து கமல் வருத்தம்

கமல்

அரியலூர் மாவட்டம் பொன் பரப்பி கிராமத்தில் தேர்தல் நாளன்று மாலை வாக்குப்பதிவு நடைபெற்று வந்தபோது வாக்குப்பதிவு மையத்தில் இருத்தரப்பினருக்கிடையே நடந்த தகராற்றில், 20-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதப்படுத்தப்பட்டன. தாக்குதலில் காயமடைந்த 10-க்கும் மேற்பட்டோர் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், பொன் பரப்பி கிராமத்தில் பிரச்னைகளைத் தவிர்க்க போலீஸார் அதிக அளவில் குவிக்கப்பட்டிருக்கின்றனர். 

கமல்

இதுகுறித்து, மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல் தனது ட்விட்டர் பக்கத்தில் ``மருதநாயகம் படத்திற்காக, என் மூத்த அண்ணன் திரு.இளையராஜாவும் நானும் சேர்ந்து எழுதிய பாடல். 300 வருடங்களுக்கு முன் நடந்த சமூக அநீதிகளை நோகும் பாடல். இன்று மனம் பதைக்கும் ``பொன்பரப்பி” சம்பவங்களுக்கும், அப்பாடல் பொருந்திப் போவது தமிழ் இனத்திற்கே பெரும் அவமானம்" என இருவர் கைவண்ணத்தில் உருவான பாடல் வரிகளை பதிவிட்டுமிருந்தார்.

இந்தப் பாடல் 2016ல் `மருதாநாயகம்' மீண்டும் எடுக்க எண்ணியபோது வெளிவிடப்பட்ட ``பொறந்தது மலையூர் மண்ணு" என்ற பாடலில் வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

மதங்கொண்டு வந்தது சாதி -
இன்று மனுஷனைத் துரத்துது
மனு சொன்ன நீதி
சித்தம் கலங்குது சாமி - இங்கு 
ரத்தம் வெறி கொண்டு ஆடுது பூமி.