ஷங்கர் 25-காக ஒன்றிணைந்த தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்கள்! | Tamil cinema celebrate shankar 25 function

வெளியிடப்பட்ட நேரம்: 20:45 (21/04/2019)

கடைசி தொடர்பு:07:36 (22/04/2019)

ஷங்கர் 25-காக ஒன்றிணைந்த தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்கள்!

இயக்குநர் ஷங்கர் திரைத் துறைக்கு வந்து  25 ஆண்டுகள் ஆனதையொட்டி, அவருக்கான பாராட்டு விழாவை நண்பர்கள் சூழ கொண்டாடி முடித்திருக்கின்றனர், தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்கள். 

ஷங்கர் 25

தமிழ் சினிமாவின் மிகப் பெரிய ஆளுமை ஷங்கர். இவருடைய படங்கள் எப்போதும் வணிகரீதியில் பெரிதாகப் பேசப்படும். இவரிடம் உதவி இயக்குநர்களாகப் பணிபுரிந்த பலரும் இன்றும் தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர்களாக வலம்வருகிறார்கள். அதில், குறிப்பிடக்கூடியவர்கள் பாலாஜி சக்திவேல், வசந்தபாலன், அட்லி போன்றோர். 'ஷங்கர் 25' நிகழ்ச்சியை அவரிடம் உதவி இயக்குநர்களாக இருந்தவர்கள் மற்றும் தற்போது இருப்பவர்கள் ஒன்றாகச் சேர்ந்து, கடந்த வருடம் ஆகஸ்ட்டில் ஒரு நட்சத்திர ஹோட்டலில் கொண்டாடி மகிழ்ந்தனர். இந்நிலையில், தற்போது அவருடன் நட்புடன் இருக்கக்கூடிய மூத்த இயக்குநர்களிலிருந்து இளம் இயக்குநர்கள் வரைக்கும் அவரைப் பாராட்டி மகிழ்ந்துள்ளனர்.

ஷங்கர்

இந்த நிகழ்ச்சியை இயக்குநர் மிஷ்கின் ஒருங்கிணைத்து, அவரது அலுவலகத்தில் ஏற்பாடு செய்திருக்கிறார். மணிரத்தினம், லிங்குசாமி, சசி, அட்லீ, வசந்தபாலன், ரஞ்சித், பாலாஜி சக்தி வேல், பாண்டிராஜ் மற்றும் தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குநர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர். ஷங்கர் தவிர நீல நிறத்தில் ’S25' என்கிற எழுத்துகள் பொறிக்கப்பட்டிருந்த டி-ஷர்ட்டை மற்ற இயக்குநர்கள் அனைவரும் அணிந்து வந்து ஷங்கரை கௌரவித்திருக்கிறார்கள். தற்போது, இவர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க