``இப்படிப் பண்ணுவீங்கன்னு எதிர்பார்க்கல!’’ - சூப்பர் சிங்கர் ஜூனியர்ஸ் தீர்ப்புக்கு நெட்டிசன்ஸ் ரியாக்‌ஷன் #SuperSinger6 | Super Singer 6 - Anushya deserve the title more than Hrithik, Netizens view 

வெளியிடப்பட்ட நேரம்: 15:53 (22/04/2019)

கடைசி தொடர்பு:16:31 (22/04/2019)

``இப்படிப் பண்ணுவீங்கன்னு எதிர்பார்க்கல!’’ - சூப்பர் சிங்கர் ஜூனியர்ஸ் தீர்ப்புக்கு நெட்டிசன்ஸ் ரியாக்‌ஷன் #SuperSinger6

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவந்த `சூப்பர் சிங்கர் ஜூனியர் 6’ நிகழ்ச்சியின், டைட்டில் வின்னராக சிறுவன் ரித்திக் தேர்வு செய்யப்பட்டுள்ளான். 

‘சூப்பர் சிங்கர் ஜூனியர் 6
 

`சூப்பர் சிங்கர் ஜூனியர் 6’ நிகழ்ச்சியின் இறுதிப்போட்டி நேற்று நடைபெற்றது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கிய சூப்பர் சிங்கர் ஜூனியர் 6 , வெற்றிகரமாக 53 எபிசோடுகளை கடந்தது. ஷங்கர் மஹாதேவன், சித்ரா, எஸ்.பி.பி.சரண், கல்பனா ஆகிய 4 பேரும் நடுவர்களாக இருந்தனர். இறுதிச்சுற்றுக்கு ரித்திக், அனுஷ்யா, சின்மயி, பூவையார் ஆகிய 4 பேரும் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். சூர்யா மற்றும் அஹானா வைல்ட் கார்ட் மூலம்  தேர்ந்தெடுக்கப்பட்டனர். சூர்யா சிங்கப்பூரைச் சேர்ந்த தமிழ்ச் சிறுவன். சின்மயி என்ற சிறுமி இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்டவர்.

‘சூப்பர் சிங்கர் ஜூனியர் 6
 

இறுதிப்போட்டி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில், பிரமாண்டமாக நடைபெற்றது. இறுதிப் போட்டியாளர்கள் ஆறு பேருமே தனித்துவத்துடன் பாடக்கூடியவர்கள் என்பதால், ஒவ்வொருவருக்குமே ஃபேன் ஃபாலோயர்கள் இருந்தனர். இறுதியில் டைட்டில் வின்னராக ரித்திக் தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு 50 லட்ச ரூபாய் மதிப்புள்ள வீடு பரிசாக வழங்கப்பட்டது. 

இரண்டாமிடம் சூர்யாவுக்கும் மூன்றாம் இடம் பூவையாருக்கும் வழங்கப்பட்டது. சூர்யாவுக்கு 25 லட்ச ரூபாய் மதிப்புள்ள வைர நகைகள் பரிசாக வழங்கப்பட்டன. பூவையாருக்கு, 10 லட்ச ரூபாய் பரிசாக வழங்கப்பட்டது.

சூப்பர் சிங்கர் ஜூனியர் 6


விஜய் தொலைக்காட்சியின் ஃபேஸ்புக் பக்கத்தில் ரித்திக்தான் வின்னர் எனப் பதிவிட்டுள்ளனர். அந்தப் பதிவுக்குக் கீழ் பலர் பாராட்டு தெரிவித்து பதிவிட்டிருந்தாலும், பலர்  விஜய் டிவியை கடுமையாக விமர்சித்துள்ளனர். அனைவரும் ரித்திக் வெற்றி பெற்றதை கொண்டாடினாலும்,  அனுஷ்யாவுக்கு முதல் மூன்று இடங்களில் ஒன்று கூட கிடைக்காதது வருத்தம் அளிப்பதாக பெரும்பாலானோர்  இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர்.  அனுஷ்யா கடந்த முறை நடந்த சூப்பர் சிங்கர் ஜூனியர்ஸில் கலந்து கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. மற்றொரு விஷயம் என்னவென்றால் முதல் மூன்று இடங்களில் ஒரு சிறுமிகூட இல்லை. இதுவும் இணையத்தில் விமர்சிக்கப்பட்டுள்ளது. 

இந்த விமர்சனங்கள் குறித்து விஜய் தொலைக்காட்சி தரப்பு விளக்கம் கேட்க முற்பட்ட போது, ``இப்போதைக்கு இதுபத்தி எதுவும் பேச முடியாது’’ என்று தவிர்த்துவிட்டனர். 

சூப்பர் சிங்கர் ஜூனியர் 6 நிகழ்ச்சியின் இறுதி முடிவுகள் பற்றி உங்களின் கருத்து என்ன? உங்கள் பார்வையில் அந்த நான்கு பேரில் முதல் மூன்று இடங்கள் யாருக்குக் கொடுப்பீர்கள்?

நீங்க எப்படி பீல் பண்றீங்க