நிதின்சத்யா தயாரிக்கும் படத்தில் வில்லன் அவதாரம் எடுக்கும் வெங்கட் பிரபு! | venkat prabhu to act as villain for vaibhav

வெளியிடப்பட்ட நேரம்: 14:05 (22/04/2019)

கடைசி தொடர்பு:14:05 (22/04/2019)

நிதின்சத்யா தயாரிக்கும் படத்தில் வில்லன் அவதாரம் எடுக்கும் வெங்கட் பிரபு!

சீரியல் நடிகர், கதாநாயகன், பாடகர், பாடலாசிரியர், இயக்குநர், தயாரிப்பாளர் என சினிமாவில் பன்முகம் கொண்டவர் வெங்கட் பிரபு. 

வெங்கட் பிரபு

``ஜருகண்டி" படத்திற்குப் பிறகு தற்போது நடிகரும் வெங்கட் பிரபுவின் நண்பருமான நிதின் சத்யா தயாரிக்கும் படத்தில் வில்லனாக நடிக்கிறார். 

இப்படத்தில் வைபவ் காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் நடிக்கிறார், வாணி போஜன் கதாநாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் ஈஸ்வரி ராவ், பூர்ணா, மைம் கோபி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

வெங்கட் பிரபு

முழுக்க முழுக்க காவல்துறை சம்பந்தப்பட்ட சஸ்பென்ஸ் திரில்லராக உருவாகும் இப்படத்தை மோகன் ராஜாவிடம் இணை இயக்குநராகப் பணியாற்றிய SG சார்லஸ் இயக்குகிறார். இவர், இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். 

தற்போது ஆர்.கே. நடிகர் படத்தை தயாரித்திருக்கும் வெங்கட் பிரபு அடுத்து சிம்புவுடன் `மாநாடு' படத்தை இயக்கவிருக்கிறார். இப்படத்தைத் தொடர்ந்து, அஜித்துடன் இணைந்து ஒரு படத்தை இயக்கவும் பேச்சு வார்த்தையில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.  .