சூர்யா விசிட்டுடன் நிறைவடைந்த ஜோதிகா - ரேவதி படம்! | Jothika's next movie wrapped in her style

வெளியிடப்பட்ட நேரம்: 15:55 (22/04/2019)

கடைசி தொடர்பு:15:55 (22/04/2019)

சூர்யா விசிட்டுடன் நிறைவடைந்த ஜோதிகா - ரேவதி படம்!

ஜோதிகா

திருமணம், குழந்தைகள் எனப் பிஸியாக இருந்த ஜோதிகாவின் '36 வயதினிலே', 'மகளிர் மட்டும்', 'காற்றின் மொழி' எனத் தமிழ் சினிமாவில் தனது இரண்டாவது இன்னிங்ஸை கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களைக் கொண்டு ஸ்டெடியாக்கி வருகிறார். 


ஜோதிகா

திருமணத்துக்கு முன்பு நடித்த படங்களைவிட, இப்போது நடிக்கும் படங்கள்தான் தனக்குப் பிடித்தமானதாக இருக்கிறது எனக் கூறுகிறார். சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிப்பில் 'குலேபகாவலி' கல்யாண் இயக்கத்தில் தயாராகும் டார்க் காமெடிப் படமொன்றில் நடித்துக்கொண்டிருந்தார். 

ஜோதிகா

ஜோதிகா, ரேவதி, யோகிபாபு ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். ரேவதி 'மாஷா' எனும் தனது 'அரங்கேற்ற வேளை' கதாபாத்திரத்திலேயே இப்படத்தில் நடிக்கிறார். பாடல் காட்சி ஒன்றைப் படமாக்கியதுடன் முடிவடைந்த படப்பிடிப்பில் தயாரிப்பாளர் சூர்யா பங்குபெற்றிருந்தார். இப்படத்தின் ஷூட்டிங் முடிவடைந்துள்ளது. முன்னதாக, ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் ராஜ் இயக்கும் 'ராட்சசி' என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார் ஜோதிகா