``அட போங்கப்பா... விஜய் கூட எப்போ நடிச்சு முடிச்சேன் தெரியுமா?'' - `தளபதி 63' பற்றி தேவதர்ஷினி | Actress devadharshini shares her Thalapathy 63 movie experience!

வெளியிடப்பட்ட நேரம்: 14:15 (23/04/2019)

கடைசி தொடர்பு:14:15 (23/04/2019)

``அட போங்கப்பா... விஜய் கூட எப்போ நடிச்சு முடிச்சேன் தெரியுமா?'' - `தளபதி 63' பற்றி தேவதர்ஷினி

தேவதர்ஷினி

கடந்த வருடம் அக்டோபர் மாதம் வெளியான `96', சமீபத்தில் வெளியான `காஞ்சனா 3', என வரிசையாக வெற்றிப் படங்களில் தனக்கே உரித்தான கதாபாத்திரங்களில் ஜொலித்துக்கொண்டிருப்பவர் நடிகை தேவதர்ஷினி. தளபதி 63 படத்தில் விஜய்க்கு அக்காவாக நடித்து முடித்திருக்கிறார். அந்தச் செய்தி சமீபத்தில் வெளியாகியிருக்கிறது. இது குறித்து கேட்டதற்கு, 

தேவதர்ஷினி

`அட போங்கப்பா.. கடந்த பிப்ரவரி மாதமே நடிச்சு முடிச்சிட்டேன். இப்போதைக்கு என்ன கதை, என்னவா நடிச்சிருக்கீங்க போன்ற தகவல்களை பகிரக் கூடாது என்பதால், அமைதியா இருந்துட்டேன். இரண்டு மாதத்திற்கு முன்பு நடந்த விஷயத்தை இப்போ போட்டிருக்காங்க' என்றவரிடம், `தளபதி 63' படத்தில் கமிட் ஆன கதையைக் கேட்டேன்,  

``அக்டோபர் மாதம் `96' ரிலீஸ் ஆன நேரத்தில் என் பெண் நியதியைத் தளபதி 63 படத்தில் நடிக்க முடியுமானு அட்லீ கேட்டார். `இப்போதான் 96 படம் நடிச்சி முடிச்சிக்காங்க. மார்ச் மாதம் பத்தாம் வகுப்பு எக்ஸாம் வருது. அதுக்கு அவங்க தயாராகணும்'னு சொன்னேன். அதை புரிஞ்சுக்கிட்டார் அட்லீ. கண்டிப்பாக எந்த ஒரு ஆர்ட்டிஸ்டாக இருந்தாலும், தளபதிகூட நடிக்க ஆவலாகத்தான் இருப்பாங்க. என் பெண்ணுக்கும் அப்படி ஒரு வாய்ப்பு வந்தது. படத்தை விடவும், இப்போது படிப்பு ரொம்ப முக்கியம். அதனால்தான் இப்போதைக்கு வேண்டாம்னு சொன்னேன். பிறகு கொஞ்ச நாள் கழித்து, `விஜய்க்கு அக்கா கேரக்டரில் நீங்க நடிக்க முடியுமா?'னு கேட்டாங்க. ஓ.கே சொன்னேன். என்னுடைய ஷெட்யூல் பிப்ரவரி மாசமே முடிஞ்சிடுச்சு. ஐந்து நாள்கள் நடிச்சு முடிச்சிட்டேன். 

தேவதர்ஷினி

என்னுடையது முக்கியமான கேரக்டராக இருக்கும். அவர் படத்தில் நடித்தது சந்தோஷமாக இருந்தது. விஜய் பற்றி ஏற்கெனவே தெரியும் என்பதால், அவருடன் நடிப்பதும் ஈஸியா இருந்துச்சு. பார்ப்போம் அடுத்தபடம் வரும்போது, என் பெண்ணுக்கு வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக நடிப்பாள்' என்றார் தேவதர்ஷினி.

நீங்க எப்படி பீல் பண்றீங்க