"என் படத்தை வச்சு வியாபாரம் பண்ண விமலும் சிங்காரவேலனும் யார்?" - கொந்தளிக்கும் இயக்குநர் சற்குணம் | sargunam furious over interim ban on kalavani 2

வெளியிடப்பட்ட நேரம்: 15:20 (23/04/2019)

கடைசி தொடர்பு:15:20 (23/04/2019)

"என் படத்தை வச்சு வியாபாரம் பண்ண விமலும் சிங்காரவேலனும் யார்?" - கொந்தளிக்கும் இயக்குநர் சற்குணம்

களவாணி -2

விமல், ஓவியா , `கஞ்சா' நடிப்பில் களவாணி-2 படத்தை எடுத்து முடித்திருக்கிறார் இயக்குநர் சற்குணம். 'களவாணி' படத்தின் விமல் - ஓவியா - சற்குணம் மீண்டும் இணைந்திருப்பதால் இப்படத்துக்கான எதிர்பார்ப்பு அதிகாரித்து இருப்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தமிழ்ப் புத்தாண்டன்று படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டது. அதைத் தொடர்ந்து படத்தை மே 17-ம்தேதி வெளியிடவும் பேச்சு வார்த்தைகள் நடந்தது. இந்நிலையில் 'மன்னர் வகையற', 'களவாணி-2' படங்களை ஆரம்பிக்க கடனைப் பெற்ற விமலும் இயக்குநர் சற்குணமும் திருப்பித் தர வேண்டும் எனத் தனலட்சுமி நிறுவனம் சார்பில் கோபி வழக்கு தொடர்ந்துள்ளார். இதன்பேரில் ஆறு வாரக் காலம் படத்தின் ரிலீஸுக்கு இடைக்காலத் தடைவிதித்துள்ளது.     

சற்குணம்

இதுகுறித்து, இயக்குநர் சற்குணம் பேசுகையில் `` 'களவாணி-2' படத்தை நான்தான் தயாரிக்கிறேன். தயாரிப்பாளர் சங்கத்துல என்னுடைய பெயர்லதான் வர்மன் புரொடக்ஷன்ஸ் இருக்கு. சென்சார் போர்டுலயிருந்து என்னுடைய பெயர்லதான் இருக்கு. என்னோட படத்தில் நடிக்கிற ஒரு நடிகர் விமல், அவருக்கு நான் சம்பளம் கொடுத்துருக்கேன். இந்த பிரச்னையபத்திப் பேசுற சிங்காரவேலனுக்கும் இந்தப் படத்துக்கும் சம்பந்தமே இல்ல. என்னுடைய படத்தை வச்சு வியாபாரம் பண்ண விமலும் சிங்காரவேலனும் யார்? நான் தயாரித்ததற்கான ஆதாரம் எல்லாம் என்கிட்ட இருக்கு. வழக்குல என்னை சம்பந்தப்படுத்தினதுக்கு ஒரு விஷயமும் இல்லை. அந்த நிறுவனத்துடன் நான் எந்த அக்ரீமென்டலையும் கையெழுத்துப் போடலை. இந்தத் தடை எளிதா நீக்கப்படும்" என்றார்.