`முன்பு கமலுக்கு மகள், இப்போது ரஜினிக்கு..!' - `தர்பார்' படத்தில் இணைந்திருக்கும் பிரபல நடிகை! | Actress Nivetha thomas joins rajin's 'Darbar' movie!

வெளியிடப்பட்ட நேரம்: 21:10 (23/04/2019)

கடைசி தொடர்பு:21:10 (23/04/2019)

`முன்பு கமலுக்கு மகள், இப்போது ரஜினிக்கு..!' - `தர்பார்' படத்தில் இணைந்திருக்கும் பிரபல நடிகை!

நிவேதா தாமஸ்


ரஜினி நடிப்பில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தயாராகி வரும் `தர்பார்' படத்தின் அப்டேட்ஸ் ஒவ்வொரு நாளும் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது.`தர்பார்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கே மாஸ் காட்டியிருந்தது. ஃபர்ஸ்ட் லுக்கிலேயே, ரஜினி போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என பார்வையாளர்கள் தீர்மானித்திருந்தார்கள்.

ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார் என்கிற செய்தி வெளியான நிலையில், இன்று படப்பிடிப்பில் கலந்துகொண்டார் நயன்தாரா. ரஜினியின் 167வது படமான `தர்பார்' படத்தின் ஷூட்டிங் மும்பையில் நடைபெற்று வருகிறது. 

அரசியல் கதைக்களத்தைக் கொண்ட `தர்பார்' படத்தில் மீண்டும் ஒரு பிரபல நடிகை இணைந்துள்ளார். அவர் நிவேதா தாமஸ். ரஜினியின் மகளாக நடிக்கிறார் என்கிற செய்தி வெளியாகியிருக்கிறது. தர்பார் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று வெளியாகி இருக்கிறது. இதில் ஷூட்டிங் நடைபெறும் இடம் மருத்துவமனை போல உள்ளது. அங்கிருந்து நிவேதா தாமஸ் மற்றும் யோகிபாபு இருவருடன் தோளில் கைபோட்டு ரஜினி நடந்து வருகிறார். யோகிபாபுவின் காஸ்டியூம் பார்க்கும்போது, அவர் ரஜினியின் அசிஸ்டன்டாக இருக்கலாம் எனத் தோன்றுகிறது. நிவேதா தாமஸ் ரஜினியின் மகளாக இருக்கலாம். 

நிவேதா தாமஸ்

`தர்பார்' படத்தில் ரஜினி போலீஸாக நடிக்கிறார். 2020-ம் ஆண்டு, பொங்கலையொட்டி இந்தப் படம் ரிலீஸாகவிருக்கிறது. மேலும், முக்கிய கதாபாத்திரத்தில், மறைந்த இயக்குநர் மகேந்திரனின் மகன் ஜான் மகேந்திரனும் நடிக்கிறார் என்கிற செய்தியும் முன்பே வெளியானது குறிப்பிடத்தக்கது. 

இன்னும் பல பிரபலங்கள் இந்தப் படத்தில் இணையவிருக்கிறார்கள் என்பதால் அடுத்தடுத்த அப்டேட்டுக்காக ரஜினியின் ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள். 

கமலின் மகளாக `பாபநாசம்' படத்தில் நடித்திருந்தார் நிவேதா தாமஸ். தற்போது, ரஜினியின் மகளாக 'தர்பார்' படத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க