`அவரைக் காப்பாற்ற முடியவில்லை; நாங்கள் தோற்றுவிட்டோம்' - உதவியாளருக்காகக் கண்ணீர் சிந்திய சன்னி லியோன்! | sunny leone responded to her trolls on social media

வெளியிடப்பட்ட நேரம்: 10:10 (24/04/2019)

கடைசி தொடர்பு:10:10 (24/04/2019)

`அவரைக் காப்பாற்ற முடியவில்லை; நாங்கள் தோற்றுவிட்டோம்' - உதவியாளருக்காகக் கண்ணீர் சிந்திய சன்னி லியோன்!

நெட்டிசன்களின் ட்ரோல் குறித்து நடிகை சன்னி லியோன் வருத்தம் தெரிவித்துள்ளார்.

சன்னி லியோன்

பிரபல நடிகை சன்னி லியோன், பஞ்சாப்பில் பிறந்து பின்னாளில் அமெரிக்காவில் இருந்து, இப்போது பாலிவுட்டில் கோலோச்சிவருகிறார். ஆனால், இப்போதும் அவரை பார்ன் ஸ்டார் எனச் சிலர் வசைபாடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். சமூக வலைதளங்களிலும் அவ்வப்போது இவரது பழைய தொழிலைவைத்து கேலியாகப் பதிவிட்டுவருகின்றனர். இதுகுறித்து மிகவும் வருத்தம் தெரிவித்துள்ளார் சன்னி. சமீபத்தில், நடிகர் அர்பாஸ் கான்  இந்தியில் தொகுத்து வழங்கும் பின்ச் ஷோவில் கலந்துகொண்டார் சன்னி, கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம், வலைதளத்தில் சன்னி போஸ்ட் ஒன்றைப் பகிர்ந்திருந்தார். அதில், துணை நடிகரும் உதவியாளருமான ஒருவருக்கு உதவி கோரி பகிரப்பட்டது அந்த போஸ்ட். ஆனால், அதற்கு எதிர்ப்புகள் எழுந்தன. 

சன்னி லியோன்

இதுகுறித்து ஷோவில் அவரிடம் கேள்வி எழுப்பினார் அர்பாஸ். அதற்கு, ``அவர் பெயர் பிரபாகர். ஷூட்டிங்கில் என்னுடைய உதவியாளராக இருந்துவந்தார். நான் அந்த போஸ்ட் பதிவிடும் சில மாதங்களுக்கு முன்பே அவருக்கு சிறுநீரகப் பாதிப்பு இருந்தது. 20 சதவிகிதம் மட்டுமே அவரது சிறுநீரகம் வேலைசெய்துவந்ததால், சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சை செய்யவேண்டி இருந்தது. அவருடைய மருத்துவமனை செலவுகள் அனைத்தையும் நானும் என் கணவரும் பார்த்துக்கொண்டோம். நமது நண்பர் அல்லது நம்முடன் வேலைபார்க்கும் ஒருவர் சாகப்போகிறார் எனத் தெரிந்தும் உதவி செய்யாமல் இருந்தால், அது மிகப்பெரிய மன உளைச்சலை ஏற்படுத்தும். 

உதவியாளர்

பிரபாகரை எனக்கு நன்கு தெரியும். பல ஆண்டுகளாக இந்த இண்டஸ்ட்ரியில் வேலைபார்த்துவருகிறார். நிறையப் பேருக்கு அவரைப் பிடிக்கும். அவருக்கு உதவ வேண்டும் எனக் கேட்டுக்கொண்டது வெறும் மெடிக்கல் பில் கட்டுவதற்காக அல்ல. அவருக்கென தனிக் குடும்பம் இருந்தது. ஒரு மகன் இருந்தான். அவர்களுக்கு உதவ கோரிக்கை வைத்துதான் உங்களால் முடிந்த உதவிகளைச் செய்யுங்கள் என அதைப் பதிவிட்டேன். மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதைப் பற்றி நான் கவலைப்படவில்லை. நான் நூறு மில்லியன் டாலருக்கு சொந்தக்காரி என அவர்கள் நினைப்பது பற்றி சிந்திக்கவில்லை. என்னைப் பொறுத்தவரை உங்களை மிகவும் நேசிக்கிற அனைவருக்கும், உங்களை கவனித்துக்கொள்ள விரும்பும் அனைவருக்கும் உதவ வேண்டும்.

சன்னி லியோன்

பிரபாகர் மிகவும் அமைதியான மனிதர். தான் நோயுற்று இருந்தபோதுகூட தனக்காக எந்த உதவியும் அவர் கேட்கவில்லை. அவருக்காக நிறையச் செய்ய வேண்டும் என நினைத்திருந்தோம். ஆனால் செய்யவில்லை. நாங்கள் அவரைக் காப்பாற்றத் தவறிவிட்டோம். இதை நினைக்கும்போது உண்மையில் மனது வலிக்கிறது. அவரை நாங்கள் நிறையவே மிஸ் செய்கிறோம்" எனச் சொல்லிக்கொண்டிருக்கும்போதே கண்ணீர் வடித்தார். இந்த வீடியோவைப் பார்த்து பலரும் சன்னி லியோனுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துவருகின்றனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க