`திருமணம் நடக்கும் ஆண்டு, நடைபெறும் இடம்!'- அறிவித்தார் எமி ஜாக்சன் | Actress Amy jackson reveal her marriage date!

வெளியிடப்பட்ட நேரம்: 13:00 (24/04/2019)

கடைசி தொடர்பு:13:00 (24/04/2019)

`திருமணம் நடக்கும் ஆண்டு, நடைபெறும் இடம்!'- அறிவித்தார் எமி ஜாக்சன்

காதலருடன் எமி ஜாக்சன்

கடந்த ஜனவரி மாதம் `2.0' ஹீரோயின் எமி ஜாக்சனுக்கும், அவரது காதலர் ஜார்ஜ் பனயிட்டோவுக்கும் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்திருந்தது. இந்நிலையில், இந்த மாதத்தின் ஆரம்பத்தில் இங்கிலாந்தின் அன்னையர் தினம் கொண்டாடப்பட்ட தினத்தன்றுதான் கர்ப்பமாக இருப்பதாக நடிகை எமிஜாக்சன் தெரிவித்திருந்தார். `அதில், நான் தாய்மை அடைந்திருக்கும் இந்தச் செய்தியை கத்தி உலகுக்குச் சொல்ல வேண்டும் அளவுக்கு சந்தோஷமாக இருப்பதாகத் தெரிவித்திருந்தார். 

அவர் தரப்பில் வெளியான வீடியோவில் தான் தாய்மை அடைந்திருப்பதாக போஸ் ஒன்றில் தெரிவித்திருந்தார்.  

கர்ப்பிணி எமி ஜாக்சன்

இங்கிலாந்தின் முக்கிய தொழிலதிபர்களில் ஒருவரான ஜார்ஜ் பனயிட்டோவும், எமி ஜாக்சனும் இணைந்து அவர்களது திருமணத்திற்கான இடத்தைப் பார்த்து உறுதி செய்துள்ளனர். 2020 ம் ஆண்டு கிரீசில் எமி ஜாக்சன் ஜோடி திருமணம் செய்ய உள்ளது. கிரீசில் உள்ள பிரபல ரெஸ்டாரன்டான மிக்கனாஸ் (Mykonos) ஐலேண்டில்தான் திருமணம் நடைபெறவிருக்கிறது. அதற்கான ஏற்பாடுகளை ஆரம்பித்துவிட்டதாகவும், திருமணத்திற்கு முக்கிய பிரபலங்களை அழைக்கவிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. 

எமி

ஆர்யாவுடன் `மதராசபட்டினம்', விக்ரமுடன் `ஐ', தனுஷூடன் `தங்கமகன்', ரஜினியுடன் `2.0' போன்ற படங்களில் நடித்தவர் எமி ஜாக்சன் என்பது குறிப்பிடத்தக்கது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


அதிகம் படித்தவை