``முத்தையா பொய் சொல்றார்; சாதிப்படம் தான் எடுக்குறார்!"- தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா | producer gnanavel raja tells about devarattam movie

வெளியிடப்பட்ட நேரம்: 17:40 (24/04/2019)

கடைசி தொடர்பு:17:40 (24/04/2019)

``முத்தையா பொய் சொல்றார்; சாதிப்படம் தான் எடுக்குறார்!"- தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா

தேவராட்டம்

ஞானவேல்ராஜா தயாரிப்பில் கௌதம் கார்த்தி, மஞ்சிமா மோகன் நடிக்க `கொம்பன்' முத்தையா இயக்கத்தில் வெளிவரவுள்ள திரைப்படம் 'தேவராட்டம்'. இப்படத்தின் பத்திரிகையாளார் சந்திப்பு  இன்று நடந்தது.

நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் முத்தையா,``இன்னைக்கு நடிக்க நிறையபேர் இருக்காங்க. கதை சொல்ல நிறையபேர் இருக்காங்க. ஆனா, தயாரிக்கதான் ஆளே இல்லை. அப்படி இயக்குநர்களை நம்பி வர்ற தயாரிப்பாளர்களுக்கு கமர்ஷியல் சண்டைக் காட்சிகள் வச்சு படம் எடுக்கிறோம். ஏன் உன் படத்தில் அரிவாள் இருக்கிறது என்கிறார்கள். கமர்ஷியல் படம் என்றால் அதை வைத்துத்தான் ஆகவேண்டியது இருக்கிறது. அதை வரும் படங்களில் குறைச்சிக்கிறேன். கமர்ஷியல் விஷயங்களைப் படத்தில் அதிகமாக வைக்கிறேன். சிட்டியில் படம் எடுத்தாலும் உறவுகளைப் பற்றித்தான் படம் எடுப்பேன்.  

முத்தையா

`தேவராட்டம்' சாதிப்படம் கிடையாது. எனக்கு அது தெரியவும் தெரியாது. குடும்ப உறவுகளைப் பற்றிய படம்தான் இது. வெளியில் வந்தால்தான் பிரண்ட்ஷிப். வீட்டுக்குள் வந்தால் உறவுதான். உறவுகள் சரியாக இருந்தால் தவறுகள் நடக்காது.  'தேவராட்டம்' என்பது வெற்றிகான ஆட்டம். வெற்றியாட்டம்னு வச்சா எப்படி இருக்கும்னு தெரியல. அதான் தேவராட்டம்னு வச்சோம். உறவுகளை வச்சு எடுக்குற படத்துல என்னோட பின்புலம் வந்துடுது. வேற எந்த ஒரு சமூகத்தைப் பற்றி எடுத்தா தப்பாகிடுமொனு பயத்துலதான் என்னோட சமூகம் குறித்து சொல்றேன். மறுபடியும் சொல்றேன் இது சாதிப்படம் இல்ல, தயவுசெய்து என்னைச் சாதிக்குள் கொண்டுபோய் விடாதீர்கள்" என்றார். 

ஞானவேல்ராஜா

இதையடுத்து பேசியத் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா,``முத்தையா பொய் சொல்றார். அவர் சாதிப்படம்தான் எடுத்திருக்கார். எடுக்கல எடுக்கலனு பொய் சொல்லாதீங்க. அது முத்தையாவோட வாழ்வியல் அவர் வளர்ந்த விதத்தை அவர் படமாக்குகிறார். ரஞ்சித் `அட்டக்கத்தி' படம் எடுத்தார். அது அவரோட வாழ்வியல். இவர் படங்கள் இவரோட வாழ்வியல்" என்றார்.