`தொய்வின்றி சிகிச்சை அளியுங்கள்; செலவைப்பற்றி கவலைப்படாதீங்க!'- எலெக்ட்ரீஷியனுக்கு உதவிய விஜய் | actor vijay visits ramachandra hospital to inquire injured electrician's health

வெளியிடப்பட்ட நேரம்: 18:10 (25/04/2019)

கடைசி தொடர்பு:18:10 (25/04/2019)

`தொய்வின்றி சிகிச்சை அளியுங்கள்; செலவைப்பற்றி கவலைப்படாதீங்க!'- எலெக்ட்ரீஷியனுக்கு உதவிய விஜய்

விஜய்

அட்லி இயக்கத்தில், விஜய் நடித்து வரும் `தளபதி 63' படத்தின் ஷூட்டிங் தற்போது ஈ.வி.பி பிலிம் சிட்டியில் நடைபெற்று வருகிறது. இந்தப் படத்துக்காக ஃபுட்பால் சம்பந்தமான ஷூட்டிங்கிற்கென தனியே பிரத்யேக ஸ்டேடியம் ஒன்றை அமைத்து படப்பிடிப்பு நடந்து வருகிறது. இந்தப் படத்தில் ஹீரோயினாக நயன்தாரா, கதிர், யோகிபாபு, ஜாக்கி செராஃப், தேவதர்ஷினி போன்றோர் நடித்து வருகின்றனர். `தளபதியுடன் கடந்த பிப்ரவரி மாதம் நடித்து முடித்திருப்பதாக சமீபத்தில் தேவதர்ஷினி தெரிவித்திருந்தார். 2019-ம் ஆண்டு `தளபதி 63' ரிலீஸாகலாம் அறிவிக்கப்பட்டுள்ளது.

விஜய்

தற்சமயம், அந்தப் படத்தின் யூனிட்டில் வேலை பார்த்துவரும் எலெக்ட்ரீஷியன் செல்வராஜ் என்பவரின் தலை மீது விழுந்து அடிபட்டது. உடனே, அருகிலிருந்த ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையறிந்த விஜய், ராமச்சந்திரா மருத்துவமனைக்கு விரைந்தார். அடிபட்டிருந்த செல்வராஜை நேரில் சந்தித்தார். பின், செல்வராஜின் தற்போதைய நிலை பற்றி விசாரித்த விஜய், அவருக்கான சிகிச்சையை எந்தவொரு தொய்வும் இன்றி செய்யும்படி மருத்துவரிடம் அறிவுறுத்தினார். அவருக்கு ஆகும் சிகிச்சைக்கான செலவுகளைப் பற்றி கவலைப்படாமல் சிகிச்சையை மேற்கொள்ளும்படியும் மருத்துவரிடம் கூறியிருக்கிறார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க