இந்தோனேசியாவின் ஜாவா தீவில் படக்குழு! - இறுதிக்கட்ட படப்பிடிப்பில் `காப்பான்' | kaappaan team visits Indonesia for song shooting

வெளியிடப்பட்ட நேரம்: 18:50 (25/04/2019)

கடைசி தொடர்பு:18:50 (25/04/2019)

இந்தோனேசியாவின் ஜாவா தீவில் படக்குழு! - இறுதிக்கட்ட படப்பிடிப்பில் `காப்பான்'

நடிகர் சூர்யா நடித்து வரும் `காப்பான்' படத்தின் ஷூட்டிங் கிட்டத்தட்ட முடியும் தருவாயில் உள்ளது. காப்பான் படத்துக்கான ஷூட்டிங்கிற்கு வந்திருப்பதாகத் தனது ட்விட்டர் பக்கத்தில் சூர்யா, நடன இயக்குநர் ஷோபி மற்றும் ஒளிப்பதிவாளர் எம்.எஸ். பிரபு உள்ளிட்டோர் இருக்கும் படத்தைப் பதிவிட்டுள்ளார் இயக்குநர் கே.வி.ஆனந்த்.

ஜாவா தீவில் காப்பான் படக்குழு

`காப்பான்' படத்துக்கான பாடல் காட்சிகளை இந்தோனேசியாவில் உள்ள ஜாவா தீவில் எடுத்துவருகிறார்கள். அங்கே பாடலுக்கான ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுத்த படத்தைத்தான் கே.வி.ஆனந்த் பதிவிட்டுள்ளார். இந்தப் படத்தில் NSG அதிகாரியாக சூர்யா நடிக்கிறார். இதில், மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் அரசியல்வாதியாக நடிக்கிறார். ஹீரோயினாக சாயிஷா நடித்துள்ளார்.

காப்பான் போஸ்டர்

இந்தப் படத்தில் ஆர்யா, சமுத்திரக்கனி போன்றோரும் இணைந்திருப்பது நாம் அறிந்ததே. ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். பரபரப்பான ஷூட்டிங்கின் முடிவை எட்டியிருக்கும் `காப்பான்' படம் வரும் ஆகஸ்ட் மாதம் ரிலீஸாக இருக்கிறது.

அதேநேரம் சுதா கொங்கரா இயக்கி வரும் `சூரரைப் போற்று' படத்திலும் சூர்யா கவனம் செலுத்தி வருகிறார். இந்தப் படத்தில் `ரவுடி பேபி'  பாடல் போன்று ஒரு பாடலை கம்போஸ் செய்திருக்கிறோம். அந்தப் பாடல் கண்டிப்பாக ஹிட் அடிக்கும் என்று படத்தின் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் கூறியிருக்கிறார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


அதிகம் படித்தவை