`பொட்டேட்டோ சிப்ஸ் கொடுத்ததும், டயட்ல இருக்கீங்களா'னு கேட்டேன்’ - விஜய்சேதுபதியுடன் தியா பயணம்! | Vj Diya shares the experience traveling with vijay sethupathy

வெளியிடப்பட்ட நேரம்: 20:20 (25/04/2019)

கடைசி தொடர்பு:12:52 (26/04/2019)

`பொட்டேட்டோ சிப்ஸ் கொடுத்ததும், டயட்ல இருக்கீங்களா'னு கேட்டேன்’ - விஜய்சேதுபதியுடன் தியா பயணம்!

இன்று மதுரையில் நடைபெற்ற தனியார் நகைக்கடை திறப்பு விழாவுக்கான நிகழ்ச்சி தொகுப்பாளினியாக சன் டிவி விஜே தியா இருந்தார். அவர் விஜய் சேதுபதியுடன் எடுத்துக்கொண்ட படத்தை தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்திருக்கிறார்.

தியா

இது தொடர்பாக அவரிடம் பேசினோம், ``மதுரை, கோவை என இரண்டு இடத்தில் தனியார் நகைக்கடை திறப்பு விழாவை நான் தான் ஹோஸ் பண்ணேன். இன்று மதுரையில் திறப்பு விழா நடந்தது. அடுத்து நாளை கோவையில். இதற்காக சாட்டட் ஃபிளைட் ஏற்பாடு செய்திருந்தாங்க. அதில் குறிப்பிட்ட சிலர் மட்டுமே பயணிக்கும் அளவுக்குக் குட்டி ஃபிளைட் அது. மதுரையில் நிகழ்ச்சி முடிந்ததும், இருவரும் இணைந்து கோவை வரை பயணித்தோம். கிட்டத்தட்ட அரைமணி நேரத்துக்கும்மேல் பயணிக்கும் வாய்ப்பு கிடைத்தது. 

தியா

இதற்கு முன்பு 'விக்ரம் வேதா', `ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்' போன்ற படங்களுக்காக அவரை சன் டி.விக்காக பேட்டி எடுத்திருக்கிறேன். அதைப் பற்றி அவரிடம் சொன்னேன். சரியாக `ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்' படத்தின்போதுதான் பேசினோம் என ஞாபகம் வைத்துச் சொன்னார். ஆச்சர்யமாக இருந்தது. என் கணவர் சிங்கப்பூர், மலேசியா என `96' படத்தை பத்து தடவைப் பார்த்திருப்பார்'னு சொன்னேன். சந்தோஷப்பட்டார். `உனக்கு நல்ல கணவர், குடும்பம் கிடைச்சிருக்கு'னு பெருமைப்பட்டார். கூடவே, அவர் வைத்திருந்த பொட்டேட்டோ சிப்ஸை எங்க எல்லோருக்கும் கொடுத்தார். `என்ன சார் டயட்ல இருக்கீங்களா..?'னு கேட்டேன். அப்படியெல்லாம் இல்லைங்க'னு சிரிச்சார். திருப்தியா சாப்பிடணும்னார். இப்படி அரை மணி நேரம் பேசிட்டே போனோம். 

தியா

`எனக்கு சாட்டட் ஃபிளைட்ல போய் பழக்கம் இல்ல சார்'னேன். `அதெல்லாம் ஒண்ணும் ஆகாது. நல்ல எக்ஸ்பீரியன்ஸா இருக்கும்'னு சொன்னார். ஃபிளைட் ஏறுவதற்கு முன்பே ஒரு செல்ஃபி எடுத்தோம். இறங்கின பிறகும் செல்ஃபி எடுத்தோம். நல்ல மனிதர் விஜய் சேதுபதி' எனப் புகழ்ந்தார்   தியா. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க