'களவாணி 2' படத்துக்கு தடை நீக்கம் - திட்டமிட்டபடி  மே மாதம் ரிலீஸ் | sargunam got the injunction order dismissed over kalavani 2 release

வெளியிடப்பட்ட நேரம்: 12:25 (26/04/2019)

கடைசி தொடர்பு:12:25 (26/04/2019)

'களவாணி 2' படத்துக்கு தடை நீக்கம் - திட்டமிட்டபடி  மே மாதம் ரிலீஸ்

களவாணி

விமல், ஓவியா , `கஞ்சா' கறுப்பு  நடிப்பில் 'களவாணி-2' படத்தை எடுத்து முடித்திருக்கிறார், இயக்குநர் சற்குணம். 'களவாணி' படத்தின் விமல் - ஓவியா - சற்குணம் மீண்டும் இணைந்திருப்பதால், இப்படத்துக்கான எதிர்பார்ப்பு அதிகரித்திருந்த நிலையில், 'மன்னர் வகையறா', 'களவாணி-2' படங்களை ஆரம்பிக்க கடனைப் பெற்ற விமலும் இயக்குநர் சற்குணமும், திருப்பித் தர வேண்டும் என தனலட்சுமி நிறுவனம் சார்பில் வழக்கு தொடரப்பட்டு, படத்தை வெளியிட ஆறு வார காலம் இடைக்காலத் தடையும் வாங்கியிருந்தனர் 

சற்குணம்

இதுகுறித்து இயக்குநர் சற்குணமும் பேசுகையில், `` 'களவாணி-2' படத்தை நான்தான் தயாரிக்கிறேன். என்னுடைய படத்தை வச்சு வியாபாரம் பண்ண விமலும் சிங்காரவேலனும் யார்? நான் தயாரித்ததற்கான ஆதாரம் எல்லாம் என்னிடம் இருக்கு. வழக்குல என்னை சம்பந்தப்படுத்தியதற்கு ஆதாரம் இல்லை. அந்த நிறுவனத்துடன் நான் எந்த அக்ரீமென்ட்டிலும் கையொப்பம் போடலை. இந்தத் தடை எளிதா நீக்கப்படும்" என்றும் கூறியிருந்தார்

அதேபோல, நீதிமன்றத்தை நாடிய இயக்குநர் சற்குணத்துக்கு, சாதகமான தீர்ப்பு வந்துள்ளது. படத்தின்மீது இருந்த இடைக்காலத் தடையை நீக்கி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  தடை நீக்கப்பட்டதால், படம் திட்டமிட்டபடி மே மாதம் ரிலீஸாகும் எனத் தெரிகிறது.