`இனி எங்களை சிங்கப்பூரில்தான் பார்க்க முடியும்' - ஆலியா மானசா | aalya Manasa and sanjiv shares their serial journey!

வெளியிடப்பட்ட நேரம்: 14:55 (26/04/2019)

கடைசி தொடர்பு:14:55 (26/04/2019)

`இனி எங்களை சிங்கப்பூரில்தான் பார்க்க முடியும்' - ஆலியா மானசா

ஆலியா

விஜய் டி.வியில் `ராஜா ராணி' சீரியல் ஆரம்பித்த கொஞ்ச நாள்களிலேயே ஆலியா மனசாவும், சஞ்சீவும் காதலிப்பதாக செய்திகள் வெளி வந்தன. ஆரம்பத்தில் மறுத்து வந்த ஜோடி, பிறகு அதை ஏற்றுக்கொண்டது. சில வருடங்கள் போகட்டும். அதற்குப் பிறகு திருமணம் செய்து கொள்ளலாம் என்கிற முடிவில் இருக்கிறோம் என்று பேட்டியில் தெரிவித்திருந்தனர். 

ஆலியா

இந்நிலையில், சமீபத்தில் நடந்து முடிந்த விஜய் டெலி அவார்ட்ஸ் நிகழ்ச்சி மேடையில் `ராஜா ராணி' சீரியல் ஜோடி ஆலியா மானசா மற்றும் சஞ்சீவ் இருவரும் மோதிரம் மாற்றிக்கொண்டு திருமணத்துக்கான அதிகாரபூர்வமான அறிவிப்பை ரசிகர்களுக்குத் தெரிவித்திருந்தனர். இந்நிலையில், சீரியலில் இன்னும் விறுவிறு வேகத்தை எட்டி வருகிறது. 

ஆலியா

இந்நிலையில், `ராஜா ராணி' சீரியலுக்கான ஷூட்டிங் இனி சிங்கப்பூரில் நடைபெறும் என அறிவித்துள்ளார் ஆலியா மானசா. தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், சஞ்சீவ் அருகில் இருக்க வீடியோவில் `அனைவருக்கும் வணக்கம், `ராஜா ராணி' சீரியல் ஷூட் இனி சிங்கப்பூரில்'' எனச் சொன்னவர், அவர் சென்றுகொண்டிருந்த இடத்தையும் வீடியோவில் காட்டினார். உடன் சஞ்சீவும் இருந்தார். 

ஆக, 'ராஜா ராணி' சீரியல் ரசிகர்களுக்கு நல்ல விருந்து இருக்கிறது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


அதிகம் படித்தவை