`ஸ்ருதி இனி என் வாழ்க்கையின் சிறந்த நண்பராக இருப்பார்' - பிரேக் அப் குறித்து மைக்கேல் | shruti haasan tweet about break up!

வெளியிடப்பட்ட நேரம்: 17:00 (26/04/2019)

கடைசி தொடர்பு:17:15 (26/04/2019)

`ஸ்ருதி இனி என் வாழ்க்கையின் சிறந்த நண்பராக இருப்பார்' - பிரேக் அப் குறித்து மைக்கேல்

ஸ்ருதிஹாசன்


கமல்ஹாசனின் மூத்த மகளான ஸ்ருதிஹாசனின் காதலர் மைக்கேல் கோர்சால் தனது சமூக வலைதளத்தில் இருவரின் பிரிவு பற்றிப் பதிவிட்டிருக்கிறார். அந்தப் பதிவு ஸ்ருதிஹாசனின் ரசிகர்கள் பலரை அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது. 

நடிகை, பாடகி எனப் பன்முகம் கொண்டவர் ஸ்ருதிஹாசன். அவரும், லண்டனைச் சேர்ந்த மைக்கேல் கோர்சாலும் காதலித்து வந்த நிலையில், கூடிய விரைவில் திருமணம் செய்யவிருப்பதாக செய்திகள் வெளியாகின. தன் மகளின் விருப்பமே எனது விருப்பமெனக் கமலும் சரி, சரிகாவும் சரி இந்தத் திருமணத்துக்கு சம்மதம் தெரிவித்துவிட்டதாகவும் செய்திகள் வெளியாகின. அதேபோல, கோர்சாலும், ஸ்ருதியும் சில பொது நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டனர் என்பதால், இருவரும் காதலிப்பதாக உறுதி செய்யப்பட்டது. 

ஸ்ருதிஹாசன்

இந்த நிலையில், மைக்கேல் கோர்சால் தனது இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டர் பக்கத்தில், `இந்த இளம்பெண் என் வாழ்க்கையின் முக்கிய சிறந்த நண்பராக, துணையாக எப்போதும் இருப்பார்' எனப் பதிவிட்டுள்ளார்.

தற்போது, விஜய் சேதுபதியுடன் இணைந்து புதிய படத்தில் ஸ்ருதிஹாசன் நடித்து வருகிறார் என்பது அனைவரும் அறிந்ததே. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க