Published:Updated:

`8 மணி நேரம் காவலில் வைத்தீர்கள்; எங்கிருந்து உத்தரவு வந்தது!' - போலீஸுக்கு ராம்கோபால்வர்மா கேள்வி

`8 மணி நேரம் காவலில் வைத்தீர்கள்; எங்கிருந்து உத்தரவு வந்தது!' - போலீஸுக்கு ராம்கோபால்வர்மா கேள்வி
News

பிரபல இயக்குநரான ராம் கோபால் வர்மா, ஆந்திர மாநிலத்தின் முன்னாள் முதல்வரான என்.டி.ஆரின் வாழ்க்கை வரலாற்றை லக்ஷ்மி'ஸ்  என்.டி.ஆர் (Lakshmi's NTR) என்ற பெயரில் படமாக எடுத்துள்ளார். இந்தப் படம், வரும் மே 1-ம் தேதி ஆந்திராவில் வெளியாக உள்ளது. இதில், தற்போதைய ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு எதிராக சில காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

இதனால், அந்தப் படத்தை வெளியிட தடைகோரி, தெலுங்கு தேசம் கட்சி தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தது. படத்தைப் பார்த்த தேர்தல் ஆணையம், அதில் தேர்தல் விதிமுறைகளுக்கு எதிராக எந்தக் காட்சிகளும் இல்லை எனக் கூறி படத்தை வெளியிட அனுமதி வழங்கியது. இந்நிலையில், விஜயவாடாவில் நடைபெறவிருந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கலந்துகொள்ள நேற்று ஹைதராபாத்திலிருந்து விஜயவாடா சென்றார் ராம்கோபால் வர்மா. ஆனால், அவரை விமான நிலையத்திலேயே தடுத்து நிறுத்திய  போலீஸார்,  ‘சட்டம் ஒழுங்கு பிரச்னைகளால் பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொள்ள உங்களுக்கு அனுமதி இல்லை’ எனக் கூறி, விமான நிலையத்தில் உள்ள  ஓர் அறையில், சுமார் 8 மணி நேரமாக அடைத்துவைத்து பின்னர் விடுவித்துள்ளனர்.

இயக்குநர் ராம்கோபால் வர்மாவை சிறைப்பிடித்த விவகாரம் நேற்று ஆந்திராவில் பரபரப்பாக பேசப்பட்டது. படத்தின் தயாரிப்பாளருக்கும், போலீஸாருக்கும் இடையே வாக்குவாதம் நடைபெற்றது. இந்த விவகாரத்துக்கு ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டியும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதற்கிடையில், இந்தச் சம்பவம் தொடர்பாக நான் கேட்கும் சில கேள்விகளுக்கு ஆந்திரா காவல் துறை பதில் கூறியே ஆக வேண்டும் என தன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் வர்மா. அதில்,  1)  நான் விஜயவாடா செல்லும்போது போலீஸ் என்னைத் தடுத்து நிறுத்தியது ஏன்? 

2)  ‘எங்களுக்கு உத்தரவு வந்ததால்தான் நாங்கள் உங்களைத் தடுக்கிறோம்’ எனக் காவலர்கள் தெரிவித்தனர். அப்படியென்றால், உங்களுக்கு எங்கிருந்து உத்தரவு வந்தது?   

3) சுமார் ஏழு முதல் எட்டு மணி நேரம் வரையிலும் நான் காவலில் வைக்கப்பட்டிருந்தேன். அந்த நேரத்தில், யாரும் என்னை வெளியில் விடவும் இல்லை. உள்ளே வந்து என்னைச் சந்தித்து காவலுக்கான விளக்கமும் அளிக்கவில்லையே ஏன்?

4) பத்திரிகையாளர்களைச் சந்திப்பதால் என்ன சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படப்போகிறது. இது என் அடிப்படை உரிமையைப் பறிக்கும் செயல்’ எனப் பல கேள்விகளை எழுப்பியுள்ளார். தொடர்ந்து தன் ட்விட்டர் பக்கத்தில், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு எதிராகவும், ஆந்திர போலீஸாருக்கு எதிராகவும் கண்டனங்களைப் பதிவிட்டுவருகிறார்.