சிவகார்த்திகேயன் படத்தில் நடிக்கும் இரண்டு இயக்குநர்கள்! | sivakarthikeyan movie shooting start in tomorrow

வெளியிடப்பட்ட நேரம்: 16:00 (07/05/2019)

கடைசி தொடர்பு:16:00 (07/05/2019)

சிவகார்த்திகேயன் படத்தில் நடிக்கும் இரண்டு இயக்குநர்கள்!

ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து முடித்திருக்கும் திரைப்படம் `மிஸ்டர் லோக்கல்'. நயன்தாரா ஹீரோயினாக நடித்திருக்கும் இந்தப் படம் இந்த மாதம் ரிலீஸாக இருக்கிறது. சிவகார்த்திகேயன் தற்போது மித்ரன் இயக்கத்தில் `ஹீரோ' படத்திலும், ராம்குமார் இயக்கிக்கொண்டிருக்கும் பெயரிடப்படாத படத்திலும் நடித்துக்கொண்டிருக்கிறார். 

சிவகார்த்திகேயன்

இந்த நிலையில், பாண்டிராஜ் எடுக்கயிருக்கும் ஒரு படத்தில் நடிக்க கமிட்டாகி இருக்கிறார். இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க இருக்கிறது. படத்தின் ஷூட்டிங் நாளைக்கு தொடங்கயிருக்கும் நிலையில், சிவகார்த்திகேயன் ஜோடியாக அனு இம்மானுவேல் நடிக்கயிருக்கிறார்.  

சமுத்திரக்கனி

ஐஸ்வர்யா ராஜேஷ் முக்கிய ரோலில் நடிக்கும் இந்தப் படத்தில் பாரதிராஜா, சமுத்திரக்கனி, நட்ராஜ், சூரி, யோகி பாபு உள்ளிட்டோரும் நடிக்கின்றனர். படத்தின் ஷூட்டிங் நாளை தேனி மாவட்டங்களைச் சுற்றி தொடங்க இருக்கிறது. படத்தின் ஒளிப்பதிவாளராக நிரவ்ஷா ஒப்பந்தமாகி இருக்கிறார். சிவகார்த்திகேயனுக்கு ஹிட் பாடல்களைக் கொடுத்த டி.இமான் இந்தப் படத்துக்கு இசையமைப்பாளராக ஒப்பந்தமாகி உள்ளார். பாண்டிராஜின் கிராமத்து மணம் இந்தப் படத்திலும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

பாரதிராஜா

நீங்க எப்படி பீல் பண்றீங்க