`எல்லாமே விளம்பரமா கோபால்?' ஸ்டார்பக்ஸ் காபி கப்பும், GOT ரசிகர்கள் கிண்டலும்! | HBO confirms Game of Thrones Starbucks coffee cup scene was a mistake

வெளியிடப்பட்ட நேரம்: 16:40 (07/05/2019)

கடைசி தொடர்பு:16:40 (07/05/2019)

`எல்லாமே விளம்பரமா கோபால்?' ஸ்டார்பக்ஸ் காபி கப்பும், GOT ரசிகர்கள் கிண்டலும்!

உலகின் மிகப் பிரபலமான டிவி தொடராகக் கருதப்படும் கேம் ஆஃப் த்ரோன்ஸின் கடைசி சீசன் தற்போது ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. அதில் நேற்று வெளியான எபிசோடின் ஒரு காட்சி செம வைரல். காரணம் அதன் காட்சியமைப்போ, நடிகர்களின் அபார நடிப்போ கிடையாது. `கேம் ஆஃப் த்ரோன்ஸ்' உலகில் எப்போது ஸ்டார்பக்ஸ் கடையைத் திறந்தது என்ற கேள்விதான். ஆம், எபிசோடின் முக்கியமான காட்சி ஒன்றில் டேனெரிஸ் டார்கேரியன் கதாபாத்திரத்தின் அருகில் இருக்கும் ஸ்டார்பக்ஸ் காபி கப் ஒன்றைத் தெளிவாக பார்க்கமுடிந்தது. 

ஸ்டார்பக்ஸ்

இதைச் சாதகமாக எடுத்துக்கொண்ட ஸ்டார்பக்ஸ் நிறுவனம், அதன் ட்விட்டர் கணக்கில் ``டேனெரிஸ் டிராகன் ட்ரிங்க் ஆர்டர் செய்வார் என நினைத்தோம்" என அதன் பங்குக்கு கேம் ஆஃப் த்ரோன்ஸை கலாய்த்தது. டிராகன் ட்ரிங்க் என்று உண்மையிலேயே ஸ்டார்பக்ஸில் ஒரு பானம் இருப்பது குறிப்பிடத்தக்கது. 

ஸ்டார்பக்ஸ்

இந்த காபி கப் திரையில் வந்தது தவறுதலாக நடந்ததா இல்லை வேண்டுமென்றே ஸ்டார்பக்ஸ் நிறுவனத்துக்கு விளம்பரம் ஏற்படுத்தச் செய்யப்பட்டதா என நெட்டிசன்கள் பலரும் கேள்வி எழுப்பினர். இதுகுறித்து ஒரு பேட்டியில் செயல் தயாரிப்பாளர்களில் ஒருவரான பெர்னி கால்ஃபீல்ட் ``இது எங்கள் தவறுதான்" என்று மன்னிப்புக் கேட்டார். மேலும் ``கேம் ஆஃப் த்ரோன்ஸின் வெஸ்டராஸில்தான் உலகின் முதல் ஸ்டார்பக்ஸ் கடை செயல்பட்டது" என்றார் ஜாலியாக.

கேம்

`கேம் ஆஃப் த்ரோன்ஸ்' தொடரின் அதிகாரபூர்வப்பக்கம் ``இது தவறாக நடந்ததுதான். மூலிகை டீயைதான் டேனெரிஸ் ஆர்டர் செய்தார்" என்று பதிவிட்டது. கலை இயக்குநர் ஹாக் ரிட்சர் ``ஒரு செட்டில் என்றாவது இப்படி சில விஷயங்கள் கவனிக்கப்படாமல் போகும். ஆனால், இதுவரை அப்படி கேம் ஆஃப் த்ரோன்ஸில் நடந்தது இல்லை என்பதாலேயே இது பெரிய விஷயம் ஆகியிருக்கிறது" என்று தெரிவித்தார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க