`முறுக்கு மீசை; மக்கள் கூட்டம்!' - விஜய் சேதுபதியின் `சங்கத்தமிழன்' ஃபர்ஸ்ட் லுக் | Vijay sethupathi's Sangaththamizhan first look

வெளியிடப்பட்ட நேரம்: 18:47 (07/05/2019)

கடைசி தொடர்பு:18:47 (07/05/2019)

`முறுக்கு மீசை; மக்கள் கூட்டம்!' - விஜய் சேதுபதியின் `சங்கத்தமிழன்' ஃபர்ஸ்ட் லுக்

`வாலு', `ஸ்கெட்ச்' ஆகிய படங்களை இயக்கியவர் விஜய் சந்தர். இதைத் தொடர்ந்து விஜய் சேதுபதியை வைத்து `சங்கத்தமிழன்'  என்ற படத்தை இயக்கிக்கொண்டிருக்கிறார். இந்தப் படத்தில் ஃபர்ஸ்ட் லுக் தற்போது வெளியாகியுள்ளது. 

சங்கத்தமிழன்

விஜய் சேதுபதி நடிப்பில் அடுத்ததாக `சிந்துபாத்', `மாமனிதன்' என இரு படங்களும் ரிலீஸுக்குத் தயாராக உள்ளது. இதற்கு நடுவே எஸ்.பி.ஜனநாதன் இயக்கும் `லாபம்' படத்திலும் பிஸியாக நடித்து வருகிறார். அதன் படப்பிடிப்பு தென்காசி, குற்றாலம் போன்ற இடங்களில் நடந்து வருகிறது. அதை முடித்துவிட்டு `சங்கத்தமிழன்' படத்தின் ஷூட்டிங்கிற்காக வரும் 20-ம் தேதிக்கு சென்னை வருகிறார், விஜய் சேதுபதி. இதற்கு முன் ஹைதராபாத்தில் கொஞ்ச நாள் ஷூட்டிங் நடந்தது குறிப்பிடத்தக்கது.

ரஜினியின் படங்களைப் போல் வசனங்கள் அனைத்தும் மாஸாக இருக்கும் என இயக்குநர் ஒரு முறை சொல்லியிருந்தார். படத்தின் காமெடி கதாபாத்திரத்தில் சூரி நடிக்கிறார். மேலும், விவேக் மெர்வின் இந்தப் படத்துக்கு இசையமைக்கின்றனர். நாசர், படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.