பார்த்திபனுக்காக கைகோக்கும் ஷங்கர் மற்றும் கமல்! | Actor parthiban movie audio launch soon

வெளியிடப்பட்ட நேரம்: 21:51 (07/05/2019)

கடைசி தொடர்பு:21:51 (07/05/2019)

பார்த்திபனுக்காக கைகோக்கும் ஷங்கர் மற்றும் கமல்!

தமிழ் சினிமாவில் இயக்குநர், நடிகர், கவிஞர் என பன்முகங்களைக் கொண்டவர் பார்த்திபன். இவரது இயக்கத்தில் `கோடிட்ட இடங்களை நிரப்புக' சில வருடங்களுக்கு முன்பு வெளியானது. இந்தப் படத்தை இவரே இயக்கியும் நடித்திருந்தார். இந்த நிலையில் தற்போது `ஒத்த செருப்பு size 7' என்ற படத்தை இயக்கி நடித்திருக்கிறார். படத்துக்கான டப்பிங் வேலைகள் நடந்துகொண்டிருக்கும் வேளையில் இன்று நடிகர் கமலை சந்தித்திருக்கிறார் பார்த்திபன்.

பார்த்திபன்

இதுகுறித்து பார்த்திபனிடம் கேட்டோம். ``என் அடுத்த படம் வித்தியாசமானது. இந்தப் படம் குறித்து எங்கேயும் இதுவரை பேசவில்லை. படத்தின் இசைவெளியீட்டு விழாவை பிரமாண்டமா நடத்தலாம் என முடிவு செய்துள்ளேன். இதற்காகதான் நடிகர் கமலை சென்று பார்த்தேன். அவர் கண்டிப்பா வருவதாக தெரிவித்திருக்கிறார். அதேபோல் இயக்குநர் ஷங்கர் சாரையும் அழைத்திருக்கிறேன். அவரும் வருவார். கண்டிப்பாக படத்தின் இசைவெளியீட்டு விழா ரசிகர்களுக்கு மிகவும் பிடிக்கும் '' என்றார் பார்த்திபன். இதுதவிர தற்போது பார்த்திபன், விஷால் நடிப்பில் வெளிவரயிருக்கும் 'அயோக்யா' படத்தில் வில்லன் ரோலில் நடித்திருக்கிறார். 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க