'என்னிடம் ஜாக்கிரதையாகவே இருங்கள்!' - கிண்டலாக தோனியை எச்சரித்த ப்ரீத்தி ஜிந்தா | Preity Zinta funnily warns MS Dhoni

வெளியிடப்பட்ட நேரம்: 09:00 (08/05/2019)

கடைசி தொடர்பு:09:00 (08/05/2019)

'என்னிடம் ஜாக்கிரதையாகவே இருங்கள்!' - கிண்டலாக தோனியை எச்சரித்த ப்ரீத்தி ஜிந்தா

இந்த வருடம் ஐபிஎல் தொடரில், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி ப்ளே ஆஃப் சுற்றுக்குத் தகுதிபெற முடியவில்லை என்றாலும், அந்த அணியின் இணை உரிமையாளர் ப்ரீத்தி ஜிந்தா, அதற்காக எப்போதும் சோர்வடைந்ததில்லை. 

ப்ரீத்தி ஜிந்தா

பாலிவுட்டில் முன்னணி நடிகையாகவும், தொழில் முனைவோராகவும் உள்ள நடிகை ப்ரீத்தி ஜிந்தா, தன் அணி தோற்றாலும் ஜெயித்தாலும் எப்போதும் அவர்களை உற்சாகப்படுத்திக்கொண்டே இருப்பார். பஞ்சாப் அணி எங்கு விளையாடினாலும் முதல் ஆளாக அங்கு சென்றுவிடுவார். கடந்த ஞாயிறு அன்று பஞ்சாப் மாநிலம் மொஹாலியில் நடந்த போட்டியில், ஆறு விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அணியை பஞ்சாப் அணி வீழ்த்தியது. 

கிங்ஸ் லெவன் பஞ்சாப்

என்னதான் பஞ்சாப் அணி இறுதிப் போட்டிக்கு செல்லமுடியவில்லை என்றாலும், நான்கு தொடர் தோல்விக்குப் பிறகு சென்னை அணியை வென்றதில் மகிழ்ச்சியாக உள்ளார் ப்ரீத்தி. அன்றைய போட்டியின்போது, தன் நண்பரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனுமான தோனியை சந்தித்துப் பேசியுள்ளார். 

தோனியுடனான சந்திப்புகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள ப்ரீத்தி ஜிந்தா, “ நான் உள்பட கேப்டன் கூலுக்கு நிறைய ரசிகர்கள் உள்ளனர். ஆனால்  தற்போது என் விசுவாசம் அவரது மகள் ஸிவா பக்கம் திரும்பியுள்ளது. நான் ஸிவாவை கடத்த வாய்ப்புள்ளது, என்னிடம் சற்று ஜாக்கிரதையாக இருங்கள்'' என தோனியிடம் கூறினேன் எனப் பதிவிட்டுள்ளார். அதற்கு, தோனி எப்படி பதிலளித்திருப்பார் என்று அவர் பாணியிலேயே கமென்ட் செய்துவருகின்றனர் தோனியின் ரசிகர்கள். 

ட்வீட்