`அவெஞ்சர்ஸ்'-க்குப் பின் அடுத்த பிரமாண்டத்துக்குத் தயாராகும் ஹாலிவுட்! #Avatar2 | Timeline of All the Avatar Sequel Announcements

வெளியிடப்பட்ட நேரம்: 13:30 (08/05/2019)

கடைசி தொடர்பு:13:36 (08/05/2019)

`அவெஞ்சர்ஸ்'-க்குப் பின் அடுத்த பிரமாண்டத்துக்குத் தயாராகும் ஹாலிவுட்! #Avatar2

அவதார் ஹாலிவுட் படம்

ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் 2009ம் ஆண்டு வெளிவந்த `அவதார்' ஹாலிவுட் படம் உலகளாவிய ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்தது. படத்திற்கான அடுத்த இரண்டு ('அவதார் 2', 'அவதார் 3') பாகங்களைப் படமாக்கவுள்ளதாக இயக்குநர் கேமரூன் 2010ம் ஆண்டிலிருந்து அறிவித்து வருகிறார். 

ஜேம்ஸ் கேமரூன்

படத்தின் இரண்டாம் பாகம் டிசம்பர் 2015ல் வெளிவருவதாகக் கூறியிருந்தார். அந்தத் தேதியில் வெளிவர முடியாத நிலையில் `அவதார் 4', `அவதார் 5' படங்களும் வரும். ஆனால் 2017ம் ஆண்டு வரக் காத்திருக்கவேண்டும் என ஜனவரி 2016ம் ஆண்டு தெரிவித்திருந்தார். 2017ம் ஆண்டும் ரசிகர்களுக்கு அல்வா கொடுப்பது போல் ஒரு புதிய ரிலீஸ் தேதி வந்தது, டிசம்பர்  2020 ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டது. தற்போது, மேலும் ஒரு புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் `அவதார் 2' டிசம்பர் 17 2021ம் ஆண்டு வெளிவரும் எனத் தெரிவித்துள்ளார். 

அவதார்

படத்தின் அடுத்த அடுத்த பாகங்கள் `அவதார் 3' 2023ம் ஆண்டு டிசம்பர் 22ம் தேதி, `அவதார் 4' டிசம்பர் 19ம் தேதி 2025ம் ஆண்டிலும் `அவதார் 5' டிசம்பர் 17ம் தேதி 2027ம் ஆண்டிலும் முறையே வெளிவரும் என டிஸ்னி நிறுவனம் அறிவித்துள்ளது. 2010 ல் ஆரம்பித்த படப்பிடிப்பு  இன்னும் நீள்வதிலும் ரிலீஸ் தேதி மாற்றி மாற்றி அறிவிக்கப்பட்டதும் ரசிகர்களையும் படக்குழுவினரையும் தொய்வடையவைக்கவில்லை. தனது அடுத்த பிரமாண்டத்துக்குத் தயாராகிறது ஹாலிவுட்!