ரஜினி, விஜய்யைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் - அடுத்த படத்தைத் தொடங்கிய சன் பிக்சர்ஸ் #sk16 | sk 16 film shoot started today

வெளியிடப்பட்ட நேரம்: 15:20 (08/05/2019)

கடைசி தொடர்பு:15:20 (08/05/2019)

ரஜினி, விஜய்யைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் - அடுத்த படத்தைத் தொடங்கிய சன் பிக்சர்ஸ் #sk16

எம்.ராஜேஷ் இயக்கத்தில் நயன்தாராவுடன் `மிஸ்டர்.லோக்கல்’ படத்தின் ரிலீஸுக்குத் தயாராகிறார், சிவகார்த்திகேயன். தற்போது, 'இரும்புத் திரை' மித்ரன் இயக்கத்தில் 'ஹீரோ' படத்தில் நடிக்கிறார். அதைத் தொடர்ந்து,  ரகுல் பிரீத் சிங் ஜோடியாக நடிக்கும் `இன்று நேற்று நாளை’  ரவிகுமார் இயக்கத்தில் சயின்ஸ் ஃபிக்ஷன் படத்திலும் நடித்து வருகிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகிவருகிறது. இதனிடையே,  சிவகார்த்திகேயனின் 16-வது படத்தை இயக்குநர் பாண்டிராஜ் இயக்குகிறார். `மெரினா’, ’கேடி பில்லா கில்லாடி ரங்கா’ ஆகிய படங்களைத் தொடர்ந்து, மூன்றாவது முறையாக இணையவிருக்கும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. 

சிவகார்த்திகேயன்

கடந்த இரண்டு நாள்களாக படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்கள் குறித்த விவரங்களை வெளியிட்டது படக்குழு. சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அனு இம்மானுவேலும், முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷும் நடிக்கின்றனர். இமான், இந்தப் படத்துக்கும் இசையமைக்கிறார்.

அர்ச்சனா, ஒளிப்பதிவாளரும் நடிகருமான நட்டி,  யோகி பாபு , சூரி ஆர்.கே.சுரேஷ்  ஆகியோரும் இணைந்துள்ளதாகப் படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.  

இன்று, இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது. முன்னதாக, சன் பிக்சர்ஸ் 'சர்கார்', 'பேட்ட' படங்களைத் தொடர்ந்து இப்படத்தை தயாரிக்கவிருப்பது குறிப்பிடத்தக்கது.