`ஹியூமன் கம்ப்யூட்டர்' சகுந்தலா தேவியாக நடிக்கும் வித்யாபாலன்! | vidhyabalan going to act as human story sakunthala devi

வெளியிடப்பட்ட நேரம்: 18:20 (08/05/2019)

கடைசி தொடர்பு:18:20 (08/05/2019)

`ஹியூமன் கம்ப்யூட்டர்' சகுந்தலா தேவியாக நடிக்கும் வித்யாபாலன்!

வித்யா பாலன் 

அப்பாவின் சீட்டுக்கட்டிலிருந்து தொடங்கியது சகுந்தலா தேவியின் கணிதப் பயணம். அதன்பிறகு, மைசூர் பல்கலைக்கழகத்தில் கணித ஆற்றலை சகுந்தலா தேவி வெளிப்படுத்தியபோது அவருக்கு ஆறு வயது. பார்த்துக்கொண்டிருந்தவர்கள் மூச்சடைத்துப் போனார்கள். எண்களைப் பெருக்கி விடை கூறுவதில் இயந்திரத்தைவிட மின்னல் வேகத்தில் கூறும் திறன் கொண்டவர் சகுந்தலா. எண்களின் கனமூலத்தைச் சொல்வதில் பலமுறையை கணினியைத் தோற்கடித்துள்ளார். 1980-ல் லண்டனில் உள்ள இம்பீரியல் கல்லூரியில் இரண்டு 13 எண்களைப் பெருக்கி, 23 விநாடிகளில் பதில் கூறி, கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார். கணிதம் தவிர, நாவல்கள், சமையல் குறிப்புகள் எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். 

வித்யா பாலன்

ஹியூமன் கம்ப்யூட்டர் என்று சிறப்புப் பெயர் கொண்டு குறிப்பிடப்படும் சகுந்தலா தேவியின் பயோபிக் சினிமாவில் வித்யாபாலன், சகுந்தலா தேவியாக நடிக்கவிருக்கிறார். இந்தச் செய்தியை அவர் தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். இந்தப் படத்தை அனு மேனன் இயக்குகிறார். இவர், London paris new york, X past is present, Waiting ஆகிய படங்களை இயக்கியுள்ளார். இந்தத் திரைப்படம் அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.