`பெண்ணின் உடலையும், உழைப்பையும் சுரண்டாத சினிமா வேண்டும்!'- நடிகைகள் சந்திப்பில் முடிவு! | Actress meeting conducted in kerala!

வெளியிடப்பட்ட நேரம்: 19:20 (08/05/2019)

கடைசி தொடர்பு:19:20 (08/05/2019)

`பெண்ணின் உடலையும், உழைப்பையும் சுரண்டாத சினிமா வேண்டும்!'- நடிகைகள் சந்திப்பில் முடிவு!

கேரளா

திரைத்துறை பெண்களின் கூட்டமைப்பான `உமன் இன் சினிமா கலெக்டிவ்' (Women in Cinema Collective / WCC) அமைப்பின் இரண்டாம் ஆண்டு நிறைவு விழா ஏப்ரல் மாதம் 29-ம் தேதி கேரளா மாநிலம் எர்ணாகுளத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ரேவதி, பார்வதி, பத்மப்ரியா, மஞ்சு வாரியர், அஞ்சலி மேனன் உட்பட மலையாளம், தமிழ், தெலுங்கு, இந்தி என இந்தியா முழுவதிலும் இருந்து திரைத்துறையினரும், பெண் படைப்பாளிகளும், தயாரிப்பாளர்களும், நடிகர்களும், தொழில் நுட்பக் கலைஞர்களும்  இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். 

கேரளா

தென்னிந்திய திரைத்துறைப் பெண்கள் மையம் சார்பாக இயக்குநர் மாலினி ஜீவரத்னம், ஏஞ்சல் பிலோமினா, ஈஸ்வரி ஆகியோர் கலந்துகொண்டனர். சினிமாவில் பெண்கள், நடிகையர்களாக  மட்டுமல்லாது துணை நடிகைகள்,  வீட்டு வேலை செய்யும் பெண் தொழிலாளர்கள் மற்றும் பின்னணி நடனக் கலைஞர்கள் என அனைவருக்கும் நிகழும் ஒரே மாதிரியான சுயமரியாதை இழப்பைப் பற்றி விவாத்தித்தனர். மேலும், இந்த விவாதத்தில் பெண்களை உடல் சுரண்டச் செய்யும் சம உரிமையற்ற ஆண்களை மையமாகக் கொண்ட சினிமாவின் ஆதிக்கப் போக்குப் பற்றியும் பேசினர். 

கேரளா

இதில் இயக்குநர் பா.இரஞ்சித், சமூக செயற்பாட்டாளர் அஜிதா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டு உரையாற்றினர்.  ``உடல், உணர்வு, உழைப்பு என சுரண்டலற்ற பெண் விடுதலை மற்றும் சம உரிமை பேசும் பெண்களுக்கான சினிமாக்கள் பற்றி Collective ஆக WCC யின் இந்த 2 நாள் நிகழ்வு குழு விவாதங்களால் நிறைந்தது. சக பெண்ணாக வேலை செய்யும் இடத்தில் சக பெண் படைப்பாளிகளை, கலைஞர்களைப் புரிந்துகொள்ள உதவும் பயிலரங்கமாக இது இருந்தது” என்றார், தமிழ் திரையுலகம் சார்பில் பங்கேற்ற மாலினி ஜீவரத்னம்.

``திரைத்துறை பெண்கள் மட்டுமல்லாது, திரைத்துறையில் உள்ள திருநங்கையர், திருநம்பியர் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து பல தீர்மானங்களை இந்தக் கூட்டமைப்பினர் முன்மொழிந்தனர். திரைத்துறை பெண்களின் ஒன்று கூடல் மிகவும் திருப்தியாக அமைந்த மகிழ்ச்சியுடன் விழா நிறைவு பெற்றது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க