``டபுள் ஆக்‌ஷனில் விஜய் சேதுபதி... டுயல் ஹீரோயின்..!” - 'சங்கத்தமிழன்' அப்டேட்ஸ் | Vijay sethupathi acting in dual role movie 'sangathamizlan'

வெளியிடப்பட்ட நேரம்: 12:26 (09/05/2019)

கடைசி தொடர்பு:12:26 (09/05/2019)

``டபுள் ஆக்‌ஷனில் விஜய் சேதுபதி... டுயல் ஹீரோயின்..!” - 'சங்கத்தமிழன்' அப்டேட்ஸ்

'வாலு', 'ஸ்கெட்ச்' ஆகிய படங்களை இயக்கியவர், விஜய் சந்தர். இவர், தற்போது விஜய் சேதுபதியை வைத்து 'சங்கத்தமிழன்' படத்தை எடுத்துவருகிறார். மதுரை மற்றும் சென்னையைச் சுற்றி நடக்கும் கதைக்களத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நிவேதா பெத்துராஜ் மற்றும் ராஷி கண்ணா நடிக்கின்றனர். ராஷி கண்ணா, தன்னுடைய போர்ஷனை நிறைவு செய்திருக்க, நிவேதா பெத்துராஜ் போர்ஷன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

நிவேதா பெத்துராஜ்

இந்நிலையில், 'சங்கத்தமிழன்' படத்தில் முதல் முறையாக விஜய் சேதுபதி இரட்டை வேடத்தில் நடிக்கிறார். வித்தியாசமான கேரக்டரைத் தேர்ந்தெடுத்து நடிக்கும் விஜய் சேதுபதி, இதிலும் வித்தியாசமாகத் தோன்றுவார் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். முக்கியமாக, இந்தப் படத்தை பழம்பெரும் நிறுவனமான விஜயா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் பி.பாரதி ரெட்டி தயாரிக்கிறார். 

சங்கத்தமிழன்

நாசர், சூரி நடிக்கும் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், சில தினங்களுக்கு முன்பு வெளியாகி வைரலானது. தற்போது விஜய் சேதுபதி, ஜனநாதன் இயக்கத்தில் 'லாபம்' படத்தின் ஷூட்டிங்கில் இருக்கிறார். 'மாமனிதன்', 'கடைசி விவசாயி' ஆகிய படங்கள் இவர் கைவசம் உள்ளன. இதுதவிர, தெலுங்கில் சிரஞ்சீவி, நயன்தாரா, அமிதாப் நடிக்கும் 'சைரா நரசிம்ம ரெட்டி' படத்திலும் முக்கிய ரோலில் நடிக்கிறார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க