`100'ல் என் பணி முடிந்தது; இனி `கூர்கா’ - படம் வெளியாகாததால் சாம் ஆன்டன் விரக்தி | Sam Anton's 100 release postponed

வெளியிடப்பட்ட நேரம்: 12:40 (09/05/2019)

கடைசி தொடர்பு:12:40 (09/05/2019)

`100'ல் என் பணி முடிந்தது; இனி `கூர்கா’ - படம் வெளியாகாததால் சாம் ஆன்டன் விரக்தி

அதர்வா நடிப்பில் சாம் ஆன்டன் இயக்கத்தில் தயாராகியிருக்கும் படம், '100'. இன்று ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில், மீண்டும் ரிலீஸ் தள்ளிப்போகிறது. இதைத் தொடர்ந்து, தனது ட்விட்டர் பக்கத்தில் விரக்தியுடன் ட்வீட் பகிர்ந்துள்ளார், சாம். 

சாம் ஆன்டன்

ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் வெளிவந்த 'டார்லிங்', 'எனக்கு இன்னொரு பேர் இருக்கு' ஆகிய படங்களை இயக்கியவர், சாம் ஆன்டன். இதற்குப் பின் அதர்வா, ஹன்சிகாவை வைத்து '100' படத்தை இயக்கினார். அதர்வா, போலீஸ் கதாபாரத்தில் நடித்திருக்கும் இப்படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்திருக்கிறார். சாம் ஆன்டன், தனது ட்விட்டர் பக்கத்தில், '' '100' படத்திற்கான உங்களது அருமையான விமர்சனங்களுக்கு நன்றி. நானும் என்னுடைய குழுவும் முழு அர்ப்பணிப்போடு இந்தப் படத்தில் பணியாற்றினோம். குறித்த நேரத்திற்கு படம் வெளியாகாத சூழ்நிலைக்கு நாங்கள் வருந்துகிறோம். மன்னிக்கவும், '100' படம்  வெளியாகாது. என்னுடைய வேலை முடிந்துவிட்டது. நான் 'கூர்கா' பட வேலைக்காக நகர்கிறேன்'' எனப் பதிவிட்டிருக்கிறார். ராதாரவி, யோகி பாபு, 'எரும சாணி' ஹரிஜா போன்ற பலர் நடித்திருக்கும் இப்படத்தை ஆரா நிறுவனம் தயாரித்துள்ளது. முதலில் இந்தப் படம் மே 3 -ம் தேதி வெளியாக இருந்தது. அதிலிருந்து இன்றைய (மே 9) தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.