"மோடியைச் சந்தித்ததுக்குக் காரணம் இதுதாங்க; கட்சியில நான் இல்லைங்க!" - கீர்த்தி சுரேஷ் அம்மா மேனகா | menaga suresh's clarification regarding her meet wtih modi

வெளியிடப்பட்ட நேரம்: 16:40 (09/05/2019)

கடைசி தொடர்பு:16:40 (09/05/2019)

"மோடியைச் சந்தித்ததுக்குக் காரணம் இதுதாங்க; கட்சியில நான் இல்லைங்க!" - கீர்த்தி சுரேஷ் அம்மா மேனகா

டெல்லியில் பாரதிய ஜனதா தலைமை அலுவலகத்தில் பிரதமர் மோடியைச் சந்தித்துவிட்டுத் திரும்பியது குறித்து, சீனியர் நடிகையும் நடிகை கீர்த்தி சுரேஷின் அம்மாவுமான மேனகாவிடம் பேசினேன்.

கீர்த்தி சுரேஷ்

‘என் கணவர் சுரேஷ் பாரதிய ஜனதா கட்சியில இருக்கார். ஆனா நான் இப்ப வரைக்கும் எந்தக் கட்சியிலயும் அடிப்படை உறுப்பினர் கிடையாது. கீர்த்தியும் இந்த விஷயத்துல என்னை மாதிரிதான். கணவர் சார்ந்திருக்கிற கட்சிங்கிற முறையில நாடாளுமன்றத் தேர்தல்ல பாரதிய ஜனதாவுக்கு ஆதரவா பிரசாரம் செய்ய டெல்லி போயிருந்தேன். பிரசாரம் முடிஞ்ச கையோட, சினிமா செலிபிரிட்டிகள் சிலர் பிரதமர் மோடியைச் சந்திக்க இருக்காங்க; நீங்களும் கலந்துக்கணும்’னு கேட்டாங்க. சுரேஷ் கோபி, கவிதான்னு அறிமுகமான சிலர் இருந்ததால நானும் கலந்துகிட்டேன். பாரதிய ஜனதா அலுவலகத்துலயே அந்தச் சந்திப்பு நடந்தது. குரூப் ஃபோட்டோல்லாம் எடுத்துக்கிட்டோம்.

அந்த நியூஸ்தான் நடிகை ’மேனகாவும் கட்சியில சேர்ந்துட்டாங்க’ என்கிற அர்த்தத்துல வெளியாகியிருக்கு. கொஞ்சம் ஒவரா போய் ‘கீர்த்தியும் பா.ஜ.க-வுல சேர்ந்துட்டாங்களாமே’னுகூட விசாரிச்சிருக்காங்க. எலக்‌ஷன் முடிஞ்சு நாடே ரிசல்ட்டை எதிர்பார்த்துக் காத்திட்டிருக்கிற நேரத்துல தப்புத் தப்பா செய்தி பரவினா நல்லாவாங்க இருக்கு? அதனால ஒரு விஷயத்தைத் தெளிவா சொல்லிடுறேன். எனக்கோ என் மகளுக்கோ அரசியல்ல ஈடுபடணும்கிற எண்ணமெல்லாம் இப்போவரைக்கும் இல்லை’ என உறுதியான குரலில் சொல்கிறார்.