`ஒருவேளை பேயா இருக்குமோ?!' - சந்தீப் கிஷனின் `கண்ணாடி' டீசர் | sandeep kishan 'kannadi' movie teaser released

வெளியிடப்பட்ட நேரம்: 19:22 (09/05/2019)

கடைசி தொடர்பு:19:22 (09/05/2019)

`ஒருவேளை பேயா இருக்குமோ?!' - சந்தீப் கிஷனின் `கண்ணாடி' டீசர்

தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஹீரோவாக இருப்பவர் நடிகர் சந்தீப் கிஷன். இவரது நடிப்பில் `மாநகரம்' படம் ஹிட் அடித்தது. இதற்குப் பிறகு இவர் தயாரிப்பாளரும், இயக்குநருமான சி.வி.குமார் `மாயவன்' படத்தில் போலீஸ் கேரக்டரில் நடித்தார். இதற்குப் பிறகு தெலுங்கில் பல படங்களில் நடித்து வந்த இவர், தமிழில் அடுத்ததாக `நரகாசூரன்' படத்தில் நடித்தார். கார்த்திக் நரேன் எடுத்திருக்கும் இந்தப் படம் ரிலீஸுக்காக காத்திருக்கிறது. மேலும், `கண்ணாடி' படத்தில் கார்த்திக் நரேன் முக்கியமான ரோலில் நடித்திருக்கிறார். இவரது ரோல் என்ன என்பது சர்ஸ்ப்ரைஸாக படக்குழு வைத்துள்ளது. 

கண்ணாடி

இந்தநிலையில், இவரது புதிய படமான கார்த்திக் ராஜூ எடுத்திருக்கும் `கண்ணாடி' திரைப்படத்தின் டீசர் இணையத்தில் இன்று வெளியாகி உள்ளது. கருணாகரன் முக்கிய ரோலில் நடித்திருக்கும் இந்தப் படம் ஹாரர் ஜானரில் உருவாகி உள்ளது.

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க