`ஆறு கதாநாயகிகள் ஒரு கதாநாயகன்!' - `7' (செவன்) படத்தின் டிரெய்லர் | six heroines one hero for nizar shafi's seven and the trailer is out

வெளியிடப்பட்ட நேரம்: 19:26 (09/05/2019)

கடைசி தொடர்பு:19:26 (09/05/2019)

`ஆறு கதாநாயகிகள் ஒரு கதாநாயகன்!' - `7' (செவன்) படத்தின் டிரெய்லர்

ஆறு கதாநாயகிகள் ஒரு கதாநாயகன் `7'(செவன்) படத்தின் டிரெய்லர் இன்று வெளியானது.

செவன்

`சுட்டக் கதை', `நாய்கள் ஜாக்கிரதை', `பலே பலே மக்டிவோய்' மற்றும் `நேனு லோக்கல்' படங்களுக்கு ஒளிப்பதிவாளராய் இருந்த நிசார் ஷஃபி, இயக்குநராக அறிமுகமாகும் படம் `செவன்' . 

நந்திதா

ரஹ்மான், ரெஜினா , நந்திதா, அனிஷா அம்ரோஸ், த்ரிதா சௌத்ரி, அதிதி ஆர்யா, புஜிதா பொன்னாட் ஆகியோர் நடிப்பில் தயாராகியுள்ளது இந்தப் படம். சைத்தன் பரத்வாஜ் இசையமைப்பில், பிரவின் கே.எல். படத்தொகுப்பை மேற்கொள்ள, பாரதியாரின் பேரன் நிரஞ்சன் பாரதி பாடல்களை எடுத்துள்ளார். ஶ்ரீக்ரீன் தயாரிப்பு நிறுவனம் இப்படத்தைத் தயாரித்துள்ளது.

rahmaan

புதுமுக நடிகர் ஹவிஷ் இப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிறார். கியூரியஸ் கேஸ் ஆஃப் பெஞ்சமின் படத்தில் வருவதுபோல் வயதான் ஒருவரின் வயது குறைவதுபோல், இப்படத்தில் கதாநாயகனுக்கு இருவேறு வயதுடையவர்களாக வருவது போல் அமைந்துள்ளது. இன்வெஸ்டிகேட்டிவ் திரில்லர் படமாக உருவாகியுள்ள  இப்படம் ஜூன் மாதம் வெளியாகவுள்ளது.