`அசையாதே.. யாரோ உன்னை படம் எடுக்கிறாங்க!'- ஸ்வாதி பதிவிட்ட ஓராண்டு நிச்சயதார்த்த படங்கள் | actress swati's first engagement day anniversary

வெளியிடப்பட்ட நேரம்: 17:30 (10/05/2019)

கடைசி தொடர்பு:17:44 (10/05/2019)

`அசையாதே.. யாரோ உன்னை படம் எடுக்கிறாங்க!'- ஸ்வாதி பதிவிட்ட ஓராண்டு நிச்சயதார்த்த படங்கள்

`சுப்பிரமணியபுரம்' படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை ஸ்வாதி. டி.வி நிகழ்ச்சித் தொகுப்பாளராக இருந்த இவர், `டேஞ்சர்' எனும் தெலுங்குப் படத்தின்மூலம் சினிமாவில் அறிமுகமானார். தெலுங்கு ரீமேக்கான `லண்டன் பப்புலு' படத்துக்குப் பிறகு, அவர் எந்தப் படத்திலும் நடிக்கவில்லை. இவருக்கும், விமானியாக பணிபுரியும் விகாஷ் என்பவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடந்தது. இந்த நட்சத்திர தம்பதிகளுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு இன்றுடன் ஓராண்டு நிறைவடைந்திருக்கின்றது. நிச்சயத்தின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களைத் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்வாதி பதிவிட்டிருக்கிறார். புகைப்படங்களுக்கு ஏற்ற மாதிரியான சில நகைச்சுவை கமென்ட்டுகளையும் அதனுடன் இணைத்து க்யூட்டாக பதிவிட்டிருக்கிறார். அவற்றுள் சில புகைப்படங்களைப் பற்றி பார்க்கலாம்.

ஸ்வாதிஸ்வாதிஸ்வாதி

ஸ்வாதி, விகாஷின் மூக்கில் ரோஜா இதழை வைப்பது போன்ற புகைப்படத்தில் `பேபி உன் மூக்கின் மேல் ஏதோ இருக்கின்றது' என்றும், அடுத்த புகைப்படத்தில் 'ஹிஹி.. பாரு நான் என்ன பண்ணியிருக்கேன்னு' என்றும், மூன்றாவது புகைப்படத்தில் `அசையாதே.. யாரோ உன்னை புகைப்படம் எடுக்கிறாங்க' என்றும் கிண்டலாகப் பதிவிட்டிருக்கிறார்.

இறுதியாக `வழக்கமான கைகள் கோக்கும் புகைப்படம்.. நிச்சயதார்த்த தினம்.. ஓகே பாய்!' என தன் இன்ஸ்டாகிராம் ஸ்டோரியை முடித்திருந்தார்.

ஸ்வாதி

வாழ்த்துகள் ஸ்வாதி - விகாஸ்!

நீங்க எப்படி பீல் பண்றீங்க