`எனக்கும் கொஞ்சம் சொல்லுங்க... நானும் ஆர்வமா இருக்கேன்!' - வதந்திக்குப் பதிலடி கொடுத்த ஐஸ்வர்யா | I have been hearing rumors on my love story says aishwarya rajesh

வெளியிடப்பட்ட நேரம்: 20:30 (10/05/2019)

கடைசி தொடர்பு:20:30 (10/05/2019)

`எனக்கும் கொஞ்சம் சொல்லுங்க... நானும் ஆர்வமா இருக்கேன்!' - வதந்திக்குப் பதிலடி கொடுத்த ஐஸ்வர்யா

காதல் குறித்த வதந்திக்கு நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் பதில் கொடுத்துள்ளார்.

ஐஸ்வர்யா ராஜேஷ்

தமிழில் முன்னணி நடிகையாக வலம் வந்துகொண்டிருக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். கனா படத்தின் வெற்றிக்குப் பிறகு கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களாக தேர்வு செய்து நடித்து வரும் அவர், அதே வேளையில் பாண்டிராஜ் - சிவகார்த்திகேயன் மீண்டும் இணைந்துள்ள படம், விக்ரமுடன் துருவ நட்சத்திரம், கறுப்பர் நகரம் போன்ற பெரிய பட்ஜெட் படங்களிலும் நடித்து வருகிறார். இதற்கிடையே, நேற்று முதல் ஐஸ்வர்யா ராஜேஷ் காதலில் விழுந்துவிட்டதாகவும், திரைத்துறையைச் சேர்ந்த முக்கிய பிரமுகர் ஒருவரைக் காதலித்து வருவதாகவும், அவரை விரைவில் திருமணம் செய்துகொள்ள உள்ளதாகவும் செய்திகள் வந்த வண்ணம் இருந்தன. 

ஐஸ்வர்யா ராஜேஷ்

தற்போது இதுகுறித்து ஐஸ்வர்யா ராஜேஷ் விளக்கம் அளித்துள்ளார். இது வெறும் வதந்தி என தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ள அவர், ``ஹாய் நண்பர்களே.... எனது காதல் கதை குறித்த வதந்திகளைக் கேட்டுக்கொண்டிருக்கிறேன். வதந்தி பரப்புபவர்கள் அந்த காதலன் யார் என்பது குறித்து எனக்கும் சொல்லுங்கள். அவர் யார் எனத் தெரிந்துகொள்ள நானும் ஆர்வமாக இருக்கிறேன்" எனக் கிண்டலாக கூறிய அவர் மேலும், ``இப்படியான பொய்யான செய்திகளைப் பரப்புவதை தயவு செய்து முதலில் நிறுத்துங்கள். எனக்கு ஏதாவது நடந்தால் உங்களுக்குத் தெரிவிக்கும் முதல் ஆள் நானாகத்தான் இருப்பேன். நான் இப்போது சிங்கிளாக இருப்பதிலேயே சந்தோஷமாக இருக்கிறேன்" எனவும் கூறியுள்ளார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க