`அட்சயதிருதியை அன்று பிறந்த எங்கள் குழந்தைக்கு விரைவில் விழா எடுக்கப்போகிறோம்!'- அமித் பார்கவ் | actor amith bargav going to conduct name ceremony function to his newborn baby!

வெளியிடப்பட்ட நேரம்: 16:20 (11/05/2019)

கடைசி தொடர்பு:16:20 (11/05/2019)

`அட்சயதிருதியை அன்று பிறந்த எங்கள் குழந்தைக்கு விரைவில் விழா எடுக்கப்போகிறோம்!'- அமித் பார்கவ்

அமித் பார்கவ்


விஜய் டி.வி-யில் சமீபத்தில் நிறைவடைந்த 'நெஞ்சம் மறப்பதில்லை' சீரியலில் நடித்தவர், அமித் பார்கவ். 'மிருதன்', சார்லி சாப்ளின் 2' போன்ற படங்களிலும் நடித்துள்ளார். இவரின் மனைவி ஶ்ரீரஞ்சனி, விஜய் டி.வி-யின் தொகுப்பாளர் என்பது எல்லோரும் அறிந்ததே.      2016-ம் ஆண்டு இருவரும் காதலித்துத் திருமணம் செய்துகொண்டனர். இந்தத் தம்பதிக்கு, கடந்த ஏழாம் தேதி பெண் குழந்தை பிறந்திருக்கிறது. அமித் பார்கவ் தன்னுடைய இன்ஸ்டாகிராமில், அதிகாரபூர்வமாக அறிவித்திருந்தார். நேற்று ஶ்ரீரஞ்சனியையும் குழந்தையையும் மருத்துவமனையிலிருந்து பத்திரமாக வீட்டுக்கு அழைத்துவந்திருக்கிறார். அமித் பார்கவிடம் பேசினோம். 

அமித் பார்கவ்

''ரொம்ப சந்தோஷமா இருக்கு. நண்பர்கள், குடும்பத்தார்னு யாருக்குமே பெருசா சொல்லல. கொஞ்ச நாள் ஆகட்டும்னு விட்டுவிட்டேன். ஶ்ரீரஞ்சனி கர்ப்பமாக இருந்தபோது இருந்த சந்தோஷத்தைவிட, இப்போது இரண்டு மடங்கு சந்தோஷத்தில் இருக்கிறேன். காரணம் எங்களுக்குப் பிறந்திருக்கும் பெண் குழந்தை. எனக்கு ஆரம்பத்திலிருந்தே பெண் குழந்தை வேண்டும் என்கிற எண்ணம் இருந்தது. ஆனால், மனைவியின் வயிற்றைப் பார்க்கும்போது கண்டிப்பாக ஆண் குழந்தைதான் பிறக்குமென்று பல பேர் சொன்னார்கள். நாங்களும் சரி, எப்படியும் ஆண் குழந்தைதான் பிறக்குமென்று நினைச்சிட்டு இருந்தோம். ஆனால், நான் ஆசைப்பட்டதுபோல பெண் குழந்தை பிறந்ததால் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி'' என்பவர், தனது குழந்தைக்கு என்ன பெயர் வைக்க வேண்டும் என்பதையும் ஏற்கெனவே முடிவுசெய்துவிட்டாராம். 

அமித்

'அப்பா-அம்மா பெயரை இணைத்து, தங்கள் குழந்தைகு வைப்பது இப்போது சகஜம்தானே. அதேபோலத்தான் நாங்களும் ஏற்கெனவே முடிவுசெய்திருந்தோம். பெண் குழந்தை பிறந்தால் இந்தப் பெயர், ஆண் குழந்தைப் பிறந்தால் இந்தப் பெயர் என முடிவுசெய்திருந்தோம். எங்களுக்கு பெண் குழந்தைப் பிறந்த பிறகு பெயருக்கான லெட்டர் V என்று வந்துள்ளது. அதைவைத்து பெயரை முடிவுசெய்துவிட்டோம். கூடிய விரைவில் குழந்தைக்கு பெயர் சூட்டு விழா நடக்கவிருக்கிறது. அதில், நாங்கள் முடிவுசெய்துள்ள பெயரை எங்களின் செல்ல மகளுக்கு வைக்கப்போகிறோம். அட்சயதிருதியை அன்றே பிறந்ததால், எங்கள் வீட்டுக்கு மகாலட்சுமியே வந்து பிறந்திருக்கிறாள் என எல்லோரும் வாழ்த்திவிட்டுப் போறாங்க. அது இன்னும் இன்னும் அதிகப் பொறுப்பை எனக்குக் கொடுத்திருக்கு' என அமித் பார்கவ் சொல்லும்போது, அவர் முகத்தில் தந்தையின் பூரிப்பைப் பார்க்க முடிகிறது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க