`நான் இந்து, இப்போது ரமலான் நோன்பில் இருக்கிறேன்!' - ப்ரியா ஆனந்த் | Actor priya ananth new try for this ramzan!

வெளியிடப்பட்ட நேரம்: 18:11 (11/05/2019)

கடைசி தொடர்பு:18:11 (11/05/2019)

`நான் இந்து, இப்போது ரமலான் நோன்பில் இருக்கிறேன்!' - ப்ரியா ஆனந்த்

ப்ரியா ஆனந்த்


சமீபத்தில் வெளியான  'எல்கேஜி' படத்தில் நடித்துமுடித்த திருப்தியில் இருப்பவர், ப்ரியா ஆனந்த். 'எதிர்நீச்சல், 'வணக்கம் சென்னை' போன்ற படங்களில் நடித்தவரான ப்ரியா ஆனந்த், இப்போது புதிய புராஜெக்ட் ஒன்றில் கமிட் ஆகியிருக்கிறார். கூடவே, ரம்ஜான் நோன்பிலும் இருக்கிறோம். என்ன காரணம் என்று அவரிடம் விசாரித்தேன். 

''அடிப்படையில் நான் இந்து. அதற்காக இந்துக் கடவுளை மட்டுமே கும்பிடுபவள் அல்ல. எனக்கு  எம்மதமும் சம்மதம்தான். சர்ச்சுக்குப் போவேன், தர்காவுக்குப் போவேன். அதேபோல எனக்குப் பிடித்த எல்லா கோயில்களுக்கும் போவேன். நம்மை மீறிய ஒரு சக்தி இந்த உலகத்தில் இருப்பதாகவே உணர்கிறேன். மற்றபடி குறிப்பிட்ட ஒரு கடவுளின்மீது அதீத பக்தி எல்லாம் கிடையாது'' என்றவர், 

ப்ரியா ஆனந்த்

''இந்த வருடம் ரம்ஜான் நோம்பு ஆரம்பித்ததிலிருந்து இப்போது வரை அதற்கான சாராம்சத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக தெரிந்துகொள்ள முயற்சிசெய்துவருகிறேன். நோன்பையும் என்னால் எவ்வளவு தூரம் கடைப்பிடிக்க முடியுமோ அவ்வளவு முயற்சிசெய்து கடைப்பிடித்துவருகிறேன். ஒரு மனிதனாய்ப் பிறந்தவன், முடிந்த அளவுக்கு மக்களில் நம்பிக்கைகளையும் மதித்து கடைப்பிடிக்க வேண்டும் என நினைக்கிறேன். அதனால்தான்  இந்த முயற்சி.'' என்றவரிடம், புதிய பட அப்டேட் குறித்து கேட்டேன், 

''ஒரு புராஜெக்ட்டில் பேசிட்டு இருக்கேன். கிட்டத்தட்ட முடிவுறும் தருவாயில் இருக்கு. ஃபைனலைஸ் ஆனதும் நிச்சயம் சொல்கிறேன்'' எனச் சிரிக்கிறார் ப்ரியா ஆனந்த். 

ப்ரியா ஆனந்த்

சமீபத்தில், ஜே.கே.ரித்திஷ் இறந்தது குறித்து ட்விட்டரில் ஒருவர் பதிவிட்ட பதிவிற்கு,  ''இது வருத்தத்திற்குரிய ஒன்று. ஶ்ரீதேவி எவ்வளவு பெரிய நடிகை. எனக்கு தனிப்பட்ட முறையில் அவரை அவ்வளவு பிடிக்கும். திடீரென இறந்துவிட்டார். அவரது இறப்பிற்கும், நான் அவருடன் நடித்ததற்கும் என்ன சம்பந்தம். அதேபோல, ஜே.கே.ரித்திஷ் போன்று ஒரு நல்லவரைப் பார்க்கவே முடியாது. எல்கேஜி ஷூட்டின்போது, அவருடன் எல்லோருமே நண்பர்களாகிட்டோம். இல்லை என்று சொல்லாதவர் அவர். பல பேருக்கு உதவியாக இருந்திருக்கிறார். பல பேரை வாழவைத்திருக்கிறார். அவரை இழந்த துக்கத்திலிருந்து இன்னும் நாங்கள் மீளவில்லை'' என வருத்தப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.  

நீங்க எப்படி பீல் பண்றீங்க