`அப்பா 50 வருஷமா வாழ்ந்த வீட்டைக் காப்பாற்ற முடியலையே!' - மிமிக்ரி சேதுவின் சகோதரர் கதறல் | mimicry sethu's brother ganesan cries for loss his house!

வெளியிடப்பட்ட நேரம்: 18:30 (11/05/2019)

கடைசி தொடர்பு:11:05 (15/05/2019)

`அப்பா 50 வருஷமா வாழ்ந்த வீட்டைக் காப்பாற்ற முடியலையே!' - மிமிக்ரி சேதுவின் சகோதரர் கதறல்

சேது

விஜய் டி.வியில் 'ராமர் வீடு' நடுவராக இருப்பவர் மிமிக்ரி சேது. மற்றவர்களை தன் மிமிக்ரியின் வாயிலாகச் சிரிக்க வைத்திருப்பவரைக் கடந்த நான்கு ஆண்டுகளாக ஒரு சோகம் அழுத்தி வருகிறது. அவரை மட்டுமல்ல சி.ஐ.டி நகரில் அவர் குடியிருந்த வீட்டின் அருகில் உள்ள கக்கன் வீட்டாருக்கும், நல்லக்கண்ணு வீட்டாருக்கும் இதே பிரச்னைதான். 'என்ன ஆச்சு என மிமிக்ரி?'' சேதுவின் அண்ணன் கணேசனிடம் கேட்டால் கண்கலங்கியபடியே பேசுகிறார், 

கணேசன்

''எங்களுக்குச் சொல்லும் அளவுக்குக்கூடச் சக்தி இல்லீங்க. எங்களுடைய அப்பா 'பலகுரல் மன்னன் சிவகங்கை சேதுராஜன்' என்றால் இன்றிருக்கும் அரசியல்வாதிகள் எல்லோருக்கும் தெரியும். 1965களிலிருந்து தி.மு.க, அ.தி.மு.க என இரண்டு கட்சிகளுக்காகவும் தன் வாழ்நாள் முழுவதும் உழைத்தவர். அ.தி.மு.கவிற்காக தன் இறுதிக்காலத்தில் உழைத்த அவருக்கான சென்னை, சி.ஐ.டி நகரில் உள்ள ஹவுசிங் போர்டில் ஒரு வீடு ஒதுக்கப்பட்டது. அந்த வீட்டில்தான் எங்கள் அப்பாவின் இறுதிக்காலமும் முடிந்தது. அவருக்குப் பிறகு, நான், என் சகோதரன் சேது சுப்ரமணியன் என இரண்டு குடும்பமும் வாடகைக் கொடுத்து தங்கியிருந்தோம். கடந்த ஏப்ரல் மாதம் ஒன்றாம் தேதி வீட்டு வசதி வாரியம் நாங்கள் தங்கியிருந்த வீட்டை புல்டவுசர் விட்டு இடித்தது. அங்கிருந்து கலங்கிய மனதோடு எங்களுடைய அக்கா வீட்டிற்கு வந்துட்டோம். இப்போதுவரை எங்க இரண்டு குடும்பத்திற்கும் வீடு கிடைக்காமல் அல்லாடிட்டு இருக்கிறோம். அக்காவீட்டில்தான் எங்க பசங்க வளராங்க'' என்றவர், 

சேது

''நான்கு வருஷமா இந்த பிரச்னை போயிட்டு இருக்கு. நந்தனம் பக்கத்தில் இருக்கும் ஒரு இடத்தில் எங்களுக்கு  வீடு கட்டித் தருவதாக சொல்லியிருந்தாங்க. இத்தனை வருஷம் வாழ்ந்துவிட்டோம். இந்த வீட்டை விலைக்கு வாங்கிக்கிறோம்னு எவ்வளவோ சொல்லிப் பார்த்துட்டோம். இங்கிருந்த வீட்டின் ஆட்கள் சில பேர் கோர்ட்டில் கேஸ் போட்டிருந்தாங்க. அதனால இத்தனை வருஷம் வீட்டை இடிக்கிற ஏற்பாடு எதுவும் இல்லாமல் இருந்தது. தற்போது அவசர அவசரமா எல்லோருடைய வீட்டையும் இடிக்கிறாங்க. கக்கன் வீட்டையும் சரி, நல்லக்கண்ணு வீட்டையும் சரி எந்தவித முன் அறிவிப்பும் இல்லாம இடிச்சிட்டாங்க.

சேது

எங்க அப்பா இருந்த வீட்டை இடிக்கும்போது அடுத்து என்ன செய்யுறதுனு தெரியாமல் நிற்கிறோம். வீட்டை இழந்து நிற்கிறோம். ஐம்பது வருடங்களாக அந்த வீடு எங்களை பார்த்திருக்கு. அது இப்போது சிதைந்து போய் நிற்கிறதைப் பார்க்கவே கஷ்டமா இருக்குங்க. எங்களுக்கு இன்னொரு இடத்தில் வீடு கட்டித் தருவதாக சொல்லியிருந்தாங்க. ஆனால், அதுவும் செய்யல. அடுத்த என்னப் பண்ணப்போறோம், எங்கேப் போகப்போறோம்னு தெரியல'' என வாய்விட்டு அழுகிறார் கணேசன். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க