Published:Updated:

'கடற் கொள்ளையன்' ஸ்டீவ் ஜாப்ஸ்!

கி.கார்த்திகேயன்

'கடற் கொள்ளையன்' ஸ்டீவ் ஜாப்ஸ்!

கி.கார்த்திகேயன்

Published:Updated:
##~##

''போர்ஷ் கம்பெனியின் தயாரிப்பான அந்த காஸ்ட்லி கைக் கடிகாரம்தான் ஸ்டீவ் ஜாப்ஸுக்கு மிகவும் பிடிக்கும். அரிதான டைட்டானியம் உலோகத்தால் மிக அற்புதமாக வடிவமைக்கப்பட்ட கடிகாரம். யாரேனும், 'அட... சூப்பர் வாட்ச்சாக இருக்கிறதே!’ என்று பாராட்டிவிட்டால் போதும்... உடனே அந்தக் கடிகாரத்தை அவர்களுக்கே பரிசளித்துவிடுவார். 'கடிகாரத்தின் விலை 2,000 டாலராச்சே’ என்றெல்லாம் கொஞ்சமும் யோசிக்க மாட்டார். ஆனால், அடுத்த சில நிமிடங்களிலேயே ஸ்டீவின் கைகளில் அதே போன்ற இன்னொரு கடிகாரம் மினுமினுக்கும். ஒரு பெட்டி நிறைய அந்த டிசைன் கடிகாரங்கள் அவருடைய அலுவலக அறையில் எப்போதும் இருக்கும். 'எப்படி உங்களால் அந்தக் கடிகாரத்தைப் பாராட்டும் ஒவ்வொருவருக்கும் அதைப் பரிசாக அளிக்க முடிகிறது?’ என்று கேட்டால், 'அந்தக் கடிகாரத்தின் அழகையும் அற்புதத்தையும் உணரும் அவர்களின் ரசனைக்கு என்னுடைய சின்ன மரியாதை அது!’ என்பார் சிரித்துக்கொண்டே...

 அதுதான் ஸ்டீவ் ஜாப்ஸ்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

'கடற் கொள்ளையன்' ஸ்டீவ் ஜாப்ஸ்!

என்னைக் கேட்டால், உலகின் மிக அற்புதமான நுகர்வோர் ஸ்டீவ்தான் என்பேன். காரணம், ஆப்பிள் நிறுவனத்தின் எந்தத் தயாரிப்பும் ஒரு நுகர்வோனாகத் தனக்கு முழு திருப்தி அளித்த பிறகுதான், சந்தையில் அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என்பதில் தீர்க்கமாக... சமயங்களில் மூர்க்கமாகவும் இருப்பார் ஸ்டீவ். ஆப்பிள் கணினிகள், மேக்கின்டாஷ் கணினிகள், ஐ-போன்கள், ஐ-பேட்கள் என எந்தத் தயாரிப்பையும் ஒரு முதலாளியாக அணுகாமல், நுகர்வோனாக அணுகியதாலேயே ஸ்டீவ் வெற்றியை ருசித்தார்!''

ஆப்பிள் நிறுவனத்தின் முன்னாள் சீனியர் வைஸ் பிரசிடென்ட் ஜே எல்லியட் அந்த நிறுவனத்தின் சேர்மனான ஸ்டீவ் ஜாப்ஸ்பற்றிய நினைவுகளைப் பகிர்ந்துகொள்ளும் புத்தகம் 'தி ஸ்டீவ் ஜாப்ஸ் வே’ (The Steve Jobs Way). தினமும் ஸ்டீவ் ஜாப்ஸுடன் நேரடியாக இணைந்து பணியாற்றிய எல்லியட், மேக்கின்டோஷ் கணினிகள், ஐ-பாட், ஐ-பேட் போன்ற ஆப்பிளின் முத்திரைத் தயாரிப்புகளின் உருவாக்கத்தில் முக்கியப் பங்கு வகித்தவர். இனி புத்தகத்தில் இருந்து...

துளித்துளியாய்...

ஸ்டீவுக்கு சின்னச் சின்ன விஷயங்களும் மிக முக்கியம். அதாவது, ஒரு கணினியின் சாஃப்ட்வேர், ஹார்டுவேர் விஷயங்களில் மட்டுமே கவனம் செலுத்த மாட்டார். ஆர்வமும் ஆசையுமாக மேக்கின்டோஷ் கணினியை வாங்கி, அட்டைப் பெட்டியைப் பிரித்ததும் முதலில் பார்வைக்கு எது தட்டுப்பட வேண்டும், எவ்வளவு விரைவாக பிளக் பாயின்ட்டில் சொருகி கணினியை இயக்க முடியும், கணினி இயங்கத் தொடங்கியதும் முதலில் திரையில் என்ன ஒளிரும் என்பதை எல்லாம் திட்டமிடுவார் ஸ்டீவ். மீண்டும் மீண்டும் ஒரு விஷயத்தைப் பற்றிப் பேசிப் பேசி, அதில் இருக்கும் குறைகளை 100 சதவிகிதம் சரிசெய்வதில் மெனக்கெடுவார்.    

'கடற் கொள்ளையன்' ஸ்டீவ் ஜாப்ஸ்!

எதுவும் எளிமையாக இருக்க வேண்டும் அவருக்கு. மேக் கணினிகளுக்கான உபயோகிப்பாளர் கையேடு தயாரிப்பது குறித்த ஆலோசனைக் கூட்டம் அது. அந்தக் கையேட்டை எப்படி எல்லாம் தயாரிக்கலாம் என்று ஆளுக்கு ஒரு ஐடியா சொல்லிக்கொண்டு இருந்தபோது ஒருவர், 'பள்ளிப் படிப்பைக்கூட முடிக்காதவர்களுக்கு  எளிதாகப் புரிய வேண்டும். அதனால், பன்னிரண்டாம் கிரேடு அளவுக்கு அதனை எளிமையாக எழுத வேண்டும்!’ என்றார். 'உலகின் அதிநவீன கம்ப்யூட்டரைப் பள்ளிப் படிப்பைக்கூட முடிக்காதவர் இயக்கி என்ன ஆகப்போகிறது?’ என்ற கேள்வியுடன் அனைவரும் ஸ்டீவ் ஜாப்ஸின் முகத்தை நோக்க, அவர் 'இல்லை’ என்பதுபோல தலையசைத்தார். 'அதானே... இன்னும் உயர்ந்த தரத்தில் அதை அமைக்கச் சொல்வார் ஸ்டீவ்’ என்று அனைவரும், நான் உட்பட எதிர்பார்க்க, 'இல்லை... பன்னிரண்டு என்பது மிக மிக அதிகம். முதல் வகுப்பு தகுதிக்கு அதை எழுதுங்கள்!’ என்று அல்டிமேட் அதிர்ச்சி கொடுத்தார் ஸ்டீவ்.

நம்பாமல் நாங்கள் அவரையே பார்க்க, 'என்னைப் பொறுத்தவரை கையேடே இல்லாமல் ஒவ்வொருவரும் மேக் கணினியை இயக்கும் அளவுக்கு அது எளிமையாக இருக்க வேண்டும். ஆனால், ஒரு மின்னணுப் பொருளோடு கையேடு அவசியம் என்பதாலேயே, அப்படி ஒன்றை நாம் வழங்க வேண்டி இருக்கிறது. அதனால், ஒன்றாம் வகுப்புத் தரத்துக்கு நாம் உருவாக்கினால் போதும்!’ என்றார் ஸ்டீவ்.

எவ்வளவு நுணுக்கமான விஷயமும் எளிமையாக இருக்க வேண்டும் ஸ்டீவுக்கு!

கார்ப்பரேட் கலாசாரத்துக்குக் கல்தா!

ஆப்பிள் நிறுவனத்தில் சேர்வதற்கு முன் நான் ஐ.பி.எம். நிறுவனத்தில் பணிபுரிந்துகொண்டு இருந்தேன். அங்கு அலுவலக பியூனிடம் காபி கொண்டுவரச் சொல்வதற்குக்கூட கார்ப்பரேட் நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும். நிறுவனத்தின் அடுத்த ஆறு மாத நடைமுறைகள் என்று சிலவற்றைப் பட்டியலிட்டு, அதன் பிரகாரம் இயங்கிக்கொண்டு இருப்பார்கள். சமயங்களில் சில நடைமுறைகளால் எந்தப் பயனும் இருக்காது என்பது 'உள்ளங்கை நெல்லிக்கனி’யாகத் தெரிந்தாலும், விடாமல் அதைப் பின்பற்றிக்கொண்டே இருப்பார்கள். ஒருகட்டத்தில், இந்த 'நடைமுறை’ச் சிக்கல் குறித்து எனது மேலதிகாரியிடம் அலுத்துச் சலித்துக்கொண்டேன். அப்போது அவர் சொன்னார், 'ஐ.பி.எம். என்பது மகா பெரிய கன்டெய்னர்களைச் சுமந்து செல்லும் கப்பல் போன்றது. அதை ஒரு சீரான வேகத்தில் முடுக்கிவிட்ட பிறகு, நாம் நினைத்த திசைக்கு எல்லாம் அதை மாற்ற முடியாது. 21 மைல்கள் பயணித்த பிறகுதான் அதன் திசையை மாற்ற முடியும். 16 மைல்கள் பயணித்தால்தான் நிறுத்தவே முடியும்!’

'கடற் கொள்ளையன்' ஸ்டீவ் ஜாப்ஸ்!

விரக்தியின் உச்சத்துக்கே சென்றேன். ஆனால், ஆப்பிளில் நான் வேலைக்குச் சேர்ந்த முதல் நாளே கடலளவு மாற்றத்தை உணர்ந்தேன். ஆப்பிள் என்பது கடற்கொள்ளையர்கள் படகு போல. நினைத்த நேரத்தில், நினைத்த மாத்திரத்தில் தங்கள் திசையையும் வேகத்தையும் மாற்றிக்கொண்டு பரபரப்பாகப் பயணித்துக்கொண்டே இருந்தனர். ஒரு விஷயம் தப்பு என்று தெரிந்தால், அடுத்த நிமிடமே கொஞ்சமும் யோசிக்காமல், அது எவ்வளவு காஸ்ட்லியான புராஜெக்ட் ஆக இருந் தாலும் நிறுத்திவிட்டு, அடுத்த வேலையைப் பார்க்கச் சென்றுவிடுவார்கள். இந்த விஷயத்தில் ஸ்டீவ் ஜாப்ஸ் கடற்கொள்ளையர்களின் தலைவன் போலத்தான் செயல்பட்டு வந்தார். அனைவருக்கும் ஒரு பணியை நிர்ணயிப்பார். அவர்கள் அதைச் செய்துகொண்டு இருக்கும்போதே, கொஞ்சம் சாய்ந்து அமர்ந்துகொண்டு அது சரிவருமா என்று ரிலாக்ஸ்டாக யோசிப்பார். 'ஆகாது’ என்று தோன்றினால், அனைவரிடமும் ஒரு வார்த்தை சொல்லிவிட்டு, அந்த புராஜெக்ட்டுக்குச் சுபம் போட்டுவிடுவார்!