``யாரோ என் நகைகளை பத்திரமா வச்சிருக்காங்க..!” - நம்பிக்கையில் இமான் அண்ணாச்சி | imman annachi believe to his theft golds return!

வெளியிடப்பட்ட நேரம்: 13:56 (13/05/2019)

கடைசி தொடர்பு:13:56 (13/05/2019)

``யாரோ என் நகைகளை பத்திரமா வச்சிருக்காங்க..!” - நம்பிக்கையில் இமான் அண்ணாச்சி

இமான் அண்ணாச்சி

'சொல்லுங்கண்ணே சொல்லுங்க' புகழ் இமான் அண்ணாச்சி தற்போது, `லாபம்',  `ஆவி காவி நடுவுல பேவி' போன்ற படங்களில் நடித்து வருகிறார். அதேசமயம் தற்போது சன் டிவியில் `சீனியர் சுட்டீஸ்', `சொல்லுங்கண்ணே சொல்லுங்க' என்கிற இரண்டு நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி வருகிறார். 

 2006-ல் வெளியான `காதல்' படம் வாயிலாக சினிமாவுக்குள் காலடி எடுத்து வைத்தவர். அதன்பிறகு தொடர்ந்து மரியான், புலி, காக்கிச்சட்டை போன்ற பல படங்களில் நகைச்சுவை நடிகராக வலம் வந்துகொண்டிருக்கிறார். அரும்பாக்கம் ராஜிவ் காந்தி தெருவில் வசித்து வரும் இமான் அண்ணாச்சி வீட்டில் கடந்த ஏப்ரல் 22-ம் தேதி, 41 பவுன் நகை திருடு போயிருந்தது. ``ஏற்கெனவே இதுபோல திருடு போனதால்தான், வீட்டில் சிசிடிவி கேமரா வைத்தேன். இப்போது மறுபடியும் இவ்வளவு நகைகள் திருடு போனது கஷ்டமா இருக்கு'' எனக் கூறியிருந்தார். கொள்ளை போன நகைகள் கிடைத்துவிட்டதா என அண்ணாச்சியைத் தொடர்புகொண்டு கேட்டோம்,

இமான்

``அரும்பாக்கம் போலீஸ்ல புகார் கொடுத்திட்டேன். இன்னும் ஒருவாரம் டைம் கேட்டிருக்காங்க. வீட்ல இருக்கவங்களும் எதுவும் பேச முடியாத நிலையில் அதிர்ச்சியில் இருக்காங்க. போலீஸ்ல கம்ப்ளைண்ட் கொடுத்திருக்கிறோம். அவங்களைத்தான் இப்போ முழுக்க முழுக்க நம்பியிருக்கோம். இவ்வளவு வருஷம் கஷ்டப்பட்டு சேர்த்தப் பணம் இப்படி போயிடுச்சேனு வருத்தம் ஒருபக்கம் இருக்கு. அதையே நினைச்சு நினைச்சு வீட்ல உட்கார்ந்திருந்தா என்ன ஆகப்போகுது. 

அதான் நான் கமிட் ஆனப் படங்களில் தொடர்ந்து நடிச்சிட்டு இருக்கேன். கல்யாணத்துக்குப் பிறகு ஆறு, ஏழு வருஷமா கஷ்டப்பட்டு சம்பாதிச்சு வாங்கினது அந்த நகை எல்லாம். என்னைப் பொறுத்தவரை நகைகள் தொலைந்த மாதிரியே தெரியல. எங்கேயோ இருக்கு. எங்கேயே யாரோ என் நகைகளைப் பத்திரமா வச்சிருக்காங்க. அது மட்டும் தெரியுது. கடவுளிடமும், காவல்துறையிடமும் சொல்லியாச்சு. எப்படியும் நான் உழைத்து சம்பாதித்தது என் கைக்கு வரும். அதுக்காக நம்பிக்கையோடு காத்துட்டு இருக்கேன்'' என்றார் இமான் அண்ணாச்சி.

நீங்க எப்படி பீல் பண்றீங்க