##~## |
''விகடன் குறும்புக் கேள்விகளுக்குலாம் கொஸ்டீன் பேப்பர் அவுட் ஆகாதா?'' - சீரியஸ் ஆகவே கேட்டார் கவிஞர் கபிலன்.
''டி.வி-யில் நியூஸ் சேனல் வெச்சுக்குறேன். ஆங்... இப்பக் கேளுங்க!'' - முன்னேற்பாடுடன் 'உதிரிப் பூக்கள்’ மானஸா.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
''சென்னையில் என்ன விசேஷம்? மிஸ்ட் அதிகமா இருக்காமே... நியூஸ்ல பார்த்தேன்!'' - அப்டேட் தகவலுடன் ஆரம்பித்தார் சிம்ரன்.
''ஈஸியா ஆன்ஸர் பண்ற மாதிரியான கேள்விகளா கேளுங்க, ப்ளீஸ்!'' - நடிகை மம்தா மோகன்தாஸ்.
''வணக்கங்க... நீங்க கேள்விகளை வரிசையாச் சொல்லிட்டீங்கன்னா, குறிச்சிக்கிட்டு ஒவ்வொண்ணா நான் பதில் சொல்லிடுவேன்!'' - உஷாராகக் கேட்டார் முன்னாள் தி.மு.க. அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம்.
இந்தியாவின் துணை ஜனாதிபதி யார்?
விடை: ஹமீத் அன்சாரி

கபிலன்: ''ஏதோ முஸ்லிம் பேருங்க. தொண்டையிலயே இருக்குது. வர மாட்டேங்குது. ம்ம்... அன்சாரி... சரிதானே?''
மானஸா: ''எவ்வளவு யோசிச்சாலும் தெரியாது. அதனால நீங்க தாராளமா அடுத்த கேள்விக்குப் போகலாம்!''
சிம்ரன்: ''ஜனாதிபதி பிரதீபா பாட்டீல்... துணை ஜனாதிபதி யாரு? தெரியலையே!''
மம்தா: ''வைஸ் பிரசிடென்ட்டா? தெரியலையே... யாருனு சொல்லுங்க. தெரிஞ்சுக்குறேன்!''
வீரபாண்டி ஆறுமுகம்: ''துணை ஜனாதிபதியா? நல்லாத் தெரியுமே... நம்ம ஹமீத் அன்சாரி!''
சமீபத்தில் எத்தனையாவது பிறந்த நாளைக் கொண்டாடினார் தமிழக முதல்வர் ஜெயலலிதா?
விடை: 64
கபிலன்: ''62. சரியானு செக் பண்ணிட்டுப் போடுங்க. தப்பா வந்துடப்போகுது!''
மானஸா: ''ஜெயலலிதா மேடமா? 52 சரியா?''
சிம்ரன்: ''சிக்ஸ்டி ஃபோர்த் பர்த் டே!''
மம்தா: ''ஜெயலலிதா மேடமா? எப்படியும் ஃபிஃப்டி சம்திங் இருக்கும்!''
வீரபாண்டி ஆறுமுகம்: ''64னு நினைக்கிறேன். எத்தனையாவது பிறந்த நாளோ கொண்டாடிட்டுப் போகட்டும் விடுங்க. இதெல்லாம் அ.தி.மு.க-காரங்ககிட்ட கேட்க வேண்டிய கேள்வி தம்பி!''
சமீபத்தில் ஷூ தாக்குதலுக்கு உள்ளான இந்தியப் பிரபலம் யார்?
விடை: ராகுல் காந்தி
கபிலன்: ''இருங்க யோசிக்கிறேன்... அமெரிக்காவுல ஜார்ஜ் புஷ் மேல வீசினாங்க, ஞாபகம் இருக்குது. இலங்கையில ராஜபக்ஷே மேல வீசினாங்க. இந்தியாவுல யார் மேல... யார் மேல?''
மானஸா: ''அய்யோ ஷூவா? யாரா இருந்தாலும் பாவம் இல்லையா? அப்படி எல்லாம் பண்ணக் கூடாது!''
சிம்ரன்: ''ராகுல்ஜி மேல வீசினாங்க. டி.வி-ல பார்த்தேன். ப்ச்... தப்புல்ல!''
மம்தா: ''டி.வி-யில அந்த ஷாட் பார்த்தேனே. ஸ்லோமோஷன்ல காட்டினாங்க. ராகுல் காந்திதானே?!''
வீரபாண்டி ஆறுமுகம்: ''யாரா இருந்தாலும் அந்த அநாகரிகமான செயலை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்!''

மருதூர் கோபாலன் ராமச்சந்திரன் என்பவர் யார்?
விடை: எம்.ஜி.ஆர்.
கபிலன்: ''நம்ம எம்.ஜி.ஆருங்க!''
மானஸா: ''யாருங்க அது? இந்தக் கேள்விக்கும் நான் அவுட்!''
சிம்ரன்: ''பிராமிஸா தெரியலை. என்ன பேரு சொன்னீங்க? அப்படி யாரும் இருக்காங்களா என்ன?''
மம்தா: ''இதெல்லாம் டூ மச்! சென்னையில இருக்கிற யாரோபத்தி கேரளப் பொண்ணுகிட்ட கேட்கறது சரியா?''
வீரபாண்டி ஆறுமுகம்: ''கேள்வியிலயே பதிலை வெச்சுக்கிட்டு கேட்குறீங்க... எம்.ஜி.ராமச்சந்திரன்தான்!''
இணையதளங்களின் பெயர்களில் இணைந்திருக்கும் டபிள்யூ டபிள்யூ டபிள்யூ (WWW) என்பதன் முழு அர்த்தம் என்ன?
விடை: வேர்ல்டு வைடு வெப்
கபிலன்: ''வேர்ல்டு வைடு வெப்னு படிச்சிருக்கேன்!''
மானஸா: ''வேர்ல்டு வைடு வெப். இப்படி... இப்படி... இப்படித்தான் கேட்கணும்!''
சிம்ரன்: ''வேர்ல்டு வைடு வெப்!''
மம்தா: ''அட... இதுக்குத் தெரியும்ங்க. வேர்ல்டு வைடு வெப்!''
வீரபாண்டி ஆறுமுகம்: ''ஏதோ சொல்லுவாங்களே... வேர்ல்டு வைடு வெப்சைட்டா? சரியாச் சொல்லிட்டேனா தம்பி?''
'அஹாவா போலிங்கோ சிந்தா சிந்தா’ என்றால் என்ன?
விடை: 'நண்பன்’ படத்தின் 'அஸ்க் லஸ்கா’ பாடலின் ஒரு வரி இது. அஹாவா என்பது ஹீப்ரு, போலிங்கோ என்பது லிங்காலா, சிந்தா என்பது மலாய் மொழி வார்த்தைகள். இவை அனைத்தும் சொல்லும் ஒரே அர்த்தம்... காதல்!
கபிலன்: '' 'நண்பன்’ படத்துப் பாட்டுல வர்ற வரிதானே! 'ஐ லவ் யூ’ங்றதை எல்லா மொழியிலும் இப்படிப் பாடி இருக்காங்க!''
மானஸா: ''எல்லா மொழியிலும் காதல் என்ற வார்த்தையைவெச்சு அந்தப் பாட்டுப் பாடி இருக்காங்க. ஏதோ ஒரு லாங்வேஜ்ல காதல்னு அர்த்தம் வரும்!''
சிம்ரன்: '''நண்பன்’ ஸாங்தானே...அதுக்கு அர்த்தம் காதல்தானே!''
மம்தா: ''இப்படி சினிமாபத்திக் கேளுங்க... பதில் சூப்பரா சொல்வேன்! அப்படின்னா, இந்தியில் 'ஐ லவ் யூ’னு அர்த்தம். சரியா?''
வீரபாண்டி ஆறுமுகம்: ''எம்.ஜி.ஆர். படங்களுக்குப் பிறகு நான் அதிகமாப் படம் பார்க்கிறது இல்லை. கடைசியா, நான் தியேட்டருக்குப் போய்ப் பார்த்த படம் 'பெரியார்’. அதனால இதுக்கு எனக்குப் பதில் தெரியாதுன்னு போட்டுக்கோங்க!''