Published:Updated:

ப்ரியா...!

ஆர்.சரண்படம் : வீ.நாகமணி

ப்ரியா...!

ஆர்.சரண்படம் : வீ.நாகமணி

Published:Updated:
##~##

ந்தியாவின் முதல் தீயணைப்புத் துறைப் பெண் அதிகாரி என்ற பெருமிதத்துடன் துறுதுறுப்பாக மீட்புப் பணிகளில் ஈடுபட்டுவந்த ப்ரியா ரவிச்சந்திரன், அப்போலோ மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் பொசுங்கிய மலராகக் கிடக்கிறார். ஜனவரி 16-ம் தேதி சென்னையின் பழமையான கட்டடங்களில் ஒன்றான எழிலகத்தைச் சூழ்ந்த தீயை அணைக்க ப்ரியா பெரிய விலையைக் கொடுத்திருக்கிறார்.

 ''அம்மாவைப் பார்த்தீங்களா சார்? என்ன சொன்னாங்க? எப்படி இருக்காங்க?'' எனத் தாயைக் காணாத மான் குட்டிகளின் மிரட்சியோடு கேட்கிறார்கள் ப்ரியாவின் மகள்கள் ஷம்ஹிதாவும் சாத்விகாவும்.  

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

'' 'ஒவ்வொருத்தரையும் ஏதோ ஒரு காரணத்துக்காகத்தான் அந்தக் கடவுள் படைச்சிருக்கான். பயப்படாம ஓடிட்டே இருக்கணும்’னு ப்ரியா எப்பவும் சொல்லிட்டே இருப்பாங்க. காய்ச்சல், தலைவலின்னாக்கூட நி

ப்ரியா...!

க்காம பரபரப்பா ஓடிட்டே இருக்கும் ப்ரியா, இவ்வளவு நாள் இப்படிப் படுத்த படுக்கையாக் கிடக்கிறதைத் தாங்க முடியலை!'' - குரல் உடைந்து பேசும் ப்ரியாவின் கணவர் ரவிச்சந்திரன் வருமான வரித் துறையில் கூடுதல் ஆணையராக இருக்கிறார். மருத்துவ உபகரணங்கள் சூழ்ந்திருக்க... சலனமே இல்லாமல் படுத்திருக்கும் ப்ரியாவின் மீது இருந்து ஜன்னல் வழிப் பார்வையை விலக்கிக்கொள்ளாமலேயே தொடர்ந்து பேசுகிறார்.

''தினமும் பல நல்ல உள்ளங்கள் தேடி வந்து ஆறுதல் சொல்லிட்டுப்போறாங்க. என் மகள்கள் படிக்கும் கோபாலபுரம் டி.ஏ.வி. பள்ளி மாணவர்களும் ஆசிரியர்களும் கூட்டுப் பிரார்த்தனை செஞ்சு இருக்காங்க. யாரோ ஒரு அம்மா வந்து, 'எம் பொண்ணு குணமடையணும்’னு குங்குமப் பிரசாதம் கொடுத்துட்டுப் போறாங்க. 'ப்ரியா உயிருக்கு ஆபத்து இல்லை’ங்கிறதுதான் எங்களுக்கு ஒரே ஆறுதல். ஆனா, அந்த விபத்தில் கண் எதிரே தன்னுடைய சகா அன்பழகன் இறந்ததை ப்ரியாவால் தாங்கிக்க முடியலை. உயிரின் மதிப்பு என்னைவிட, உங்களைவிட, தீயணைப்புத் துறையைச் சேர்ந்தவங் களுக்கு நல்லாவே தெரியும்ல... அதான் அவங்களுக்கு ஆறுதல் சொல்லக்கூட வார்த்தை இல்லாமத் தவிச்சு நிக்கிறோம் நாங்க!''

ப்ரியாவின் பூர்வீகம் சேலம் அருகே கல்குறிச்சி கிராமம். குடும்பத்தின் மூத்த மகளான இவருக்கு ஒரு தம்பி உண்டு. பள்ளி, கல்லூரி நாட்களில் எல்லாம் ப்ரியா பரம சாது. சென்னை எத்திராஜ் கல்லூரியில் பி.ஏ. முடிக்கும் வரை யூனிஃபார்ம் சர்வீஸ் பணிகளின் மீதான தனது ஆர்வத்தை யாரிடமும் ப்ரியா பகிர்ந்துகொண்டதே இல்லையாம். ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். படிப்புகளுக்குத் தன்னைத் தயார்படுத்திக்கொள்ளவே டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் எம்.ஏ. சோஷியாலஜி படிக்க சேர்ந்தார். ரேங்க் ஹோல்டராகப் படிப்பை முடித்தவர், ஐ.பி.எஸ். தேர்வுகளுக்குத் தீவிரமாகத் தயாராகிவந்தார். 2002-ல் டி.என்.பி.எஸ்.சி. க்ரூப்-1 பணிக்குத் தேர்வாகி இருக்கிறார். முதல்வர்

ப்ரியா...!

ஜெயலலிதா, இந்தியாவிலேயே முதன் முறையாகத் தீயணைப்புத் துறையில் இரண்டு பெண் அதிகாரிகளுக்கான பணி நியமனத்துக்கு ஒப்புதல் பெற்று இருந்த சமயம் அது. முதல் அதிகாரியாகத் தேர்வானவர் ப்ரியா ரவிச்சந்திரன்.

ப்ரியாவுக்கு தீயணைப்புத் துறை வட்டாரத்தில் ரொம்ப வும் நல்ல பேர். 'உத்தரவிடுவதுடன் நின்றுவிடாமல், முன்னின்று அணியை வழிநடத்திச் செல்லும் திறமைசாலி, தைரியசாலி’ என்கிறார்கள். 2004-ல் கோவையில் நடந்த ஒரு தீ விபத்தில் பல உயிர்களைக் காப்பாற்றி இருக்கிறார். அப்போது நெருப்புப் பிழம்புகளிடம் இருந்து மயிரிழையில் உயிர் தப்பி இருக்கிறார்.

சேலத்தில் ஆடிட்டராக இருக்கும் ப்ரியாவின் தந்தை நல்லியப் பன் சின்னச் சின்ன வாக்கியங்களாகப் பேசுகிறார். ''கிட்டத் தட்ட 55 சதவிகித தீக்காயம். முகத்தில் இருந்து முட்டிக்கால் வரை தீக்காயம்.  திரும்பவும் வழக்க மான உடல் உழைப்புத் தேவைப்படும் வேலை களில் ப்ரியாவால் ஈடுபட முடியுமானு தெரியலை. ஒவ்வொரு தடவை எம் பொண்ணு யூனிஃபார்ம் போட்டுட்டு வேலைக்குக் கிளம்புறப்பவும் பெருமையா இருக்கும். அதே சமயம், ஓரத்துல கொஞ்சம் பயமாவும் இருக்கும். நடக்கக் கூடாதுனு எதிர்பார்த்தது நடந்திருச்சுன் னாலும், அதை எதிர்கொள்ளும் ஆறுதலும் தேறுதலும் வந்து குவியுது.

நம்ம முதல்வர் நேர்லயே வந்து ப்ரியாவுக்கு ஆறுதல் சொல்லிட்டுப் போனாங்க. பேசக் கூடிய நிலையில் இல்லாத ப்ரியாவும் முதல்வர் வந்திருப்பதை உணர்ந்து பேச முயற்சி செஞ்சா. 'ஆர் யூ ஏபில் டு ஹியர் மீ ப்ரியா?’னு முதல்வர் ரெண்டு தடவை கேட்டதும் 'யெஸ் மேடம்’னு பதில் சொன்னா. நேர்ல வந்து பார்த்ததுக்கு நன்றி சொன்ன ப்ரியாகிட்ட, 'இட்ஸ் மை டியூட்டி’னு வாஞ்சையோடு சொன்னாங்க. கூடவே, 'உனக்காகத் தினமும் நான் கடவுள்கிட்ட வேண்டிக்கிறேன் ப்ரியா. நீ சீக்கிரம் பரிபூரணமா குணம் அடைஞ்சிடுவே’னு அவங்க சொன்னதும் எங்களுக்கே கண்ணீர் பெருக்கெடுத் திருச்சு.

ப்ரியா...!

'உங்க மக எவ்வளவு தைரியமான பொண்ணுன்னு எனக்கு நல்லாத் தெரியும். அவங்க எவ்வளவு அழகா இருப்பாங்கன் னும் எனக்குத் தெரியும். அவங்களோட பழைய முகத்தை மீட்டுக் கொடுக்க வேண்டியது என் பொறுப்பு’னு என்கிட்ட சொல்லிட்டுப் போனாங்க. அப்போலோ எம்.டி. டாக்டர் பிரதாப் ரெட்டிகிட்ட ப்ரியாவுக்கான மருத்துவச் செலவுகள் அனைத்தையும் அரசே ஏற்றுக்கொள்ளும்னு சொல்லிட்டுப் போயிருக்காங்க.  

இப்போ கொஞ்சம் பரவாயில்லை. ப்ரியாவோட நிலைமையில் சின்ன முன்னேற்றம் இருக்கு. கொஞ்சம் திரவ உணவு எடுத்துக்க முடியுது. பிளாஸ்டிக் சர்ஜரிக்குக்கூட வாய்ப்பு கொடுக்காத அளவுக்கு உடல் முழுக்க சருமம் பொசுங்கி இருக்கு. பாதிக்கப்பட்ட இடங்களில் அவள் உடம்பில் இருந்தே சருமத்தை எடுத்துப் பொருத்த சிரமப்பட்டோம். எப்படியோ முதல் கட்ட சிகிச்சை முடிஞ்சிருக்கு. தகுந்த மருத்துவச் சிகிச்சைதான் இன்னிக்கு அவளோட ஆயுளுக்கு உத்தரவாதம் கொடுத்திருக்கு. தீக்காயங்கள் ஆற இன்னும் ஒரு வருஷம்கூட ஆகலாம். ஆனா, எங்களுக்கு எங்க செல்ல மகள் உயிரோடு கிடைச்சதே சந்தோஷம்தான்!'' - கண்ணீரோடு முடித்தார் அந்தத் தந்தை.

அம்மா சீக்கிரமே திரும்பி வந்துவிடுவார்கள் என்ற நம்பிக்கையோடு விளையாடிக் கொண்டு இருக்கிறார்கள் ஷம்ஹிதாவும் சாத்விகாவும்!